செய்திகள்

‘திருமணத்தின்போது 19 நாள்கள் எரிமலை போல...’- நடிகை ஹன்சிகா ஆவேசம்! 

நடிகை ஹன்சிகா தனது திருமணத்தின்போது ஏற்பட்ட நெருக்கடி குறித்து பேசியுள்ளார். 

DIN

நடிகை ஹன்சிகா தமிழில் ‘எங்கேயும் காதல்’, ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ படத்தின் மூலம் பிரபலமடைந்தார். அதன்பின் ‘பிரியாணி’, ’சிங்கம் 2’ உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

மேலும், தமிழ் மற்றும் தெலுங்கில் சில படங்களில் நடித்து வருகிறார். ஹன்சிகா நடிப்பில் சிங்கிள் ஷாட்டில் எடுக்கப்பட்ட இந்த படத்தின் கால அளவு ஒரு மணி நேரம் மற்றும் நாற்பத்தைந்து நிமிடங்கள் ஆகும். இந்த நேரத்தை ஒரே ஷாட்டில் சுவாரசியமான முறையில் படமாக்கியிருக்கிறார்கள். ருத்ரன்ஷ் செல்லுலாய்ட்ஸ் பேனரின் கீழ் பொம்மக் சிவா தயாரித்துள்ள இப்படத்தை ராஜு துசா எழுதி இயக்கியுள்ளார்.

ஹன்சிகா தொழிலதிபர் சோகேல் என்பவரை டிசம்பர் 4ஆம் தேதி  ஜெய்பூர் அரண்மனையில் பிரம்மாண்டமாக திருமணம் செய்துகொண்டார்.

இந்நிலையில், இவர்களின் திருமண விடியோ ‘லவ் ஷாதி டிராமா’என்கிற பெயரில் டிஸ்னி ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் பிப்.10ஆம் நாள் வெளியாக உள்ளது. தற்போது இந்த விடியோவின் டிரைலர் வெளியாகியுள்ளது. 

இந்த விடியோவில், “திருமணத்தின்போது 19நாள்கள் எரிமலை போல கொந்தளிப்பான மனநிலையில் இருந்தேன். ஒரு காகிதம், ஒரு எழுதுகோல்  இருந்தால் போதும் அடுத்தவர்களின் வாழ்க்கையை நாசமாக்க முடியுமென நம்புகிறார்கள்” என ஆவேசமுடன் பேசும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது. கலகலப்பான நடனம், ஆட்டம் பாட்டத்துடனும் இப்படி ஆவேசமுடனும் திரைப்படத்தினைப் போலவே பல உணர்ச்சிகளை கொண்டதாக இந்த விடியோ எடுக்கப்பட்டுள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜம்மு-காஷ்மீரில் 3 துருப்பிடித்த பீரங்கி குண்டுகள் கண்டுபிடிப்பு

காந்தப் பார்வை... ஸ்ருஷ்டி பன்னாட்டி!

டிஎஸ்பி சிராஜ்..! வெளிநாட்டில் 100 விக்கெட்டுகள்!

3 தேசிய விருதுகள்! பார்க்கிங் படக்குழுவை வாழ்த்திய கமல் ஹாசன்!

நிறைவடையும் தங்க மகள்... மகளே என் மருமகளே தொடரின் ஒளிபரப்பு அறிவிப்பு!

SCROLL FOR NEXT