செய்திகள்

‘வாரிசு’ தயாரிப்பாளருடன் நடிகர் ராம் சரண், இயக்குநர் ஷங்கர்!

தயாரிப்பாளர் தில் ராஜூவுடன் இயக்குநர் ஷங்கர், நடிகர் ராம் சரண் கலந்து கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

DIN

தயாரிப்பாளர் தில் ராஜூவுடன் இயக்குநர் ஷங்கர், நடிகர் ராம் சரண் கலந்து கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

இயக்குநர் ஷங்கர் தற்போது ராம் சரண் நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார். தெலுங்கு மற்றும் தமிழில் உருவாகும் இந்தப் படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினி கிரியேஷன்ஸ் சார்பாக தில் ராஜு தயாரிக்கிறார். 

இந்தப் படத்தில் ராம் சரணுக்கு ஜோடியாக கியாரா அத்வானி நடிக்க, அஞ்சலி முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இயக்குநர் ஷங்கருடன் கார்த்திக் சுப்புராஜ் இணைந்து இந்தப் படத்தின் திரைக்கதையை எழுதியுள்ளார். தமன் இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார். அஞ்சலி, எஸ்.ஜே. சூர்யா முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இந்நிலையில் படக்குழு ஹைதராபாத்தில் புகழ்பெற்ற சார்மினாரில் படப்பிடிப்பு நடத்தி வருகிறது. நடிகை கியாரா அத்வானிக்கு சமீபத்தில் நடிகர் சித்தார்த் மல்லோத்ராவுடன் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு படக்குழு பூத்தூவி திருமண வாழ்த்துகளை தெரிவித்துள்ளது.

இதில் தயாரிப்பாளர் தில் ராஜூ, நடிகர் ராம் சரண், இயக்குநர் ஷங்கர் மற்றும் படக்குழுவினர் கலந்து கொண்டனர். வாரிசு படத்தின் மூலம் தமிழ் ரசிகர் மத்தியில் பிரபலமானவர் தயாரிப்பாளர் தில் ராஜூ. இந்தப் படம் ரூ.300 கோடி தாண்டி வசூலித்து வருவது குறிப்பிட்டத்தக்கது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆடிப் பெருக்கு: தாமிரவருணி கரையோரங்களில் சிறப்பு வழிபாடு

ஆடிப் பெருக்கு: தாமிரவருணி கரையோரங்களில் சிறப்பு வழிபாடு

கல்லிடைக்குறிச்சியில் எஸ்டிபிஐ பூத் கமிட்டி கலந்தாய்வுக் கூட்டம்

திசையன்விளையில் நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு மருத்துவ முகாம்

கால்வாயில் காா் கவிழ்ந்து 11 போ் உயிரிழப்பு; நால்வா் காயம்

SCROLL FOR NEXT