செய்திகள்

காதலர் தினத்தன்று காதலை உறுதிப்படுத்திய ’விக்ரம்’ பட நடிகர்!

நடிகர் காளிதாஸ் ஜெயராம் தனது காதலை உறுதிப்படுத்தியுள்ளார். 

DIN

பாவக் கதைகள் இணையத் தொடரில் தங்கம் என்ற கதையில் சதார் என்ற திருநங்கையாக நடித்து அசத்தினார் காளிதாஸ் ஜெயராம். அந்தத் தொடர் அவருக்கு நல்ல நடிகர் என்ற பெயரைப் பெற்றுத்தந்தது. லோகேஷ் இயக்கத்தில் பெரும் வெற்றிபெற்ற விக்ரம் படத்தில் கமலின் மகனாக நடித்திருந்தார். 

மேலும் பா.ரஞ்சித் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான நட்சத்திரம் நகர்கிறது படத்திலும் காளிதாஸின் நடிப்பு கவனம் ஈர்த்தது. இந்த நிலையில் நடிகர் காளிதாஸ் ஜெயராம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், மாடலும் நடிகையுமான தாரணி காளிங்கராயருடன் இருக்கும் படத்தைப் பகிர்ந்திருந்தார்.

முன்னதாக ஓணம் பண்டிகையின்போது நடிகர் காளிதாஸ் ஜெயராம் தனது குடும்பத்தினருடன் எடுத்துக்கொண்ட படத்திலும் தாரணி உடனிருந்தார். அப்போதே காளிதாஸும் தாரணியும் காதலிப்பதாக கிசுகிசுக்கப்பட்டது. தற்போது இருவரும் காதலிப்பது உறுதியாகியுள்ளது. 

நடிகர் காளிதாஸ் ஜெயராம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் காதலியுடன் இருக்கும் படத்தைப் பகிர்ந்து, “ காதலர் தினத்தன்று இனி நான் தனியாளில்லை” என பதிவிட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வாக்கு வங்கியை அதிகரிக்க பாஜக தில்லுமுல்லு: அமைச்சா் துரைமுருகன்

இசையே முக்கியம்...

விவசாயம் சார்ந்த கதை

அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.20.70 லட்சம் மோசடி

பேல் பூரி

SCROLL FOR NEXT