செய்திகள்

'இயக்குநர் ராஜமௌலி செய்த தவறு இதுதான்...’- நடிகை கங்கனா ரணாவத்! 

இயக்குநர் ராஜமௌலி மதம் பற்றி கூறியதற்கு நடிகை கங்கனா ஆதரவு குரல் எழுப்பியுள்ளார். 

DIN

ஆர்ஆர்ஆர் படத்தின் இயக்குநர் ராஜமௌலி மதம் பற்றி கூறியது இணையத்தில் வைரலாகி வருகிறது. 

இயக்குநா் எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கத்தில் வெளியான ‘ஆா்ஆா்ஆா்’ திரைப்படம் கடந்த மாா்ச் மாதம் தெலுங்கு, தமிழ், ஹிந்தி மொழிகளில் வெளியானது.நடிகா்கள் ராம் சரண், ஜூனியா் என்டிஆா் உள்ளிட்டோா் நடிப்பில் வெளியான இந்தத் திரைப்படம் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது. அத்துடன் உலக அளவில் ரூ.1,000 கோடிக்கும் அதிகமாக வசூலித்து சாதனை படைத்தது.

தி நியூ யார்க்கர் பேட்டியில் ராஜமௌலி “எனக்கும் கடவுள் நம்பிக்கையில்லை. ஆனால் என்னுடைய கருத்தை படத்தில் திணிக்க விரும்பமாட்டேன். சினிமா வணிக ரீதியிலானது. மக்கள் விரும்புகிறார்கள் அதனால் அவர்கள் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கிறேன். அது என் வேலை அவ்வளவே. நான் கடவுள் நம்பிக்கையற்றவன். மதம் என்பது சுரண்டல் தன்மையுடையது...” எனக் கூறியிருந்தார். 

இந்தக் கருத்துக்கு பல்ரும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் நடிகை கங்கனா ரணாவத் ஆதரவு தெரிவித்துள்ளார். கங்கனா கூறியதாவது: 

உலகம் அவர் மீது விமர்சனம் வைக்கும் அளவுக்கு அவர் என்ன செய்துவிட்டார்?தயவு செய்து சொல்லுங்கள். நமது தொலைந்து போன நாகரீகத்தை பாகுபலி படமாக எடுத்ததற்காவா? அல்லது ஆர்ஆர்ஆர் போன்ற தேசியவாத படத்தினை எடுத்ததற்காவா? சர்வதேச சிவப்பு கம்பள வரவேற்பில் வேஷ்டி சட்டை அணிந்ததற்காவா? 

அவர் என்ன தவறு செய்தார் தெரியும். அவர் இந்த நாட்டினை காதலிக்கிறார். உள்ளூர் சினிமாவை உலக சினிமாவிற்கு கொண்டு சென்றார். அவர் இந்த நாட்டிற்கு அர்பணிப்புடன் இருந்துள்ளார். அதுதான் அவர் செய்த தவறு. ஆனால் எவ்வளவு தைரியம் இருந்தால் இந்த நாட்டிலுள்ளவர்கள் அவரது நேர்மையை கேள்வி கேட்கலாம்? உங்களுக்கு அசிங்கமாக இல்லையா. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமர்நாத் யாத்திரை செல்ல நாளைமுதல் அனுமதியில்லை! காஷ்மீர் நிர்வாகம் அறிவிப்பு

ஏ சான்றிதழ் பெற்ற ரஜினி திரைப்படங்கள்!

எங்கள் கூட்டணியிலிருந்து எந்த கட்சியும் வெளியேறாது: அமைச்சர் கே.என்.நேரு

பாலியல் வழக்கு: பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ஆயுள் தண்டனை!

ஓவல் டெஸ்ட்டில் டிஆர்எஸ் சர்ச்சை; கள நடுவர் செய்தது சரியா?

SCROLL FOR NEXT