செய்திகள்

காஷ்மீரில் சிவராத்திரி கொண்டாடிய நடிகை த்ரிஷா! (விடியோ) 

‘லியோ’ படப்பிடிப்புக்கு காஷ்மீர் சென்றுள்ள நடிகை த்ரிஷா அங்கு சிவராத்திரியை கொண்டாடியுள்ள விடியோ இணையத்தில் கவனம் பெற்றுள்ளது. 

DIN

மாஸ்டர் திரைப்படத்திற்குப் பிறகு நடிகர் விஜய் - இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகும் திரைப்படம் லியோ. விக்ரம் வெற்றியைத் தொடர்ந்து இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்தப் படத்தில் நடிகை த்ரிஷா, ஆக்‌ஷன் கிங் அர்ஜுன், பிரியா ஆனந்த், சஞ்சய் தத், மிஷ்கின், சாண்டி, மேத்யுவ் தாமஸ், கெளதம் வாசுதேவ் ஆகியோர் நடிக்க உள்ளதாக படக்குழு அறிவித்திருந்தது.

தனி விமானத்தில் நடிகர் விஜய், த்ரிஷா, லோகேஷ் கனகராஜ் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோர் காஷ்மீர் பயணம் செய்யும் விடியோ சமீபத்தில்  வைரலானது.

நடிகை த்ரிஷா 13 ஆண்டுகளுக்குப் பிறகு விஜய்யுடன் இணைந்து நடிப்பதாலும் விக்ரம் படத்தின் மாபெரும் வெற்றியினாலும் ‘லியோ’ படத்தின் மீது எதிர்பார்ப்புள்ளது.

சமீபத்தில் த்ரிஷா உடல்நிலை காரணமாக காஷ்மீர் படப்பிடிப்பில் இருந்து 3 நாளில் திரும்பி வந்துவிட்டதாக தகவல் வெளியான நிலையில் அதை பொய்யென நிரூபிக்கும் வகையில் த்ரிஷா புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். 

இந்நிலையில் நேற்று சிவராத்திரியை முன்னிட்டு லியோ படப்பிடிப்பு தளத்திற்கு அருகில் உள்ள சிவன் கோயிலில் கொண்டாடியதாக தகவல் வெளியாகியுள்ளது. த்ரிஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சிவ லிங்கத்திற்கு பால் ஊற்றி சாமி தரிசனம் செய்துள்ள விடியோவை பகிர்ந்துள்ளார். இந்த விடியோவிற்கு 2 இலட்சத்திற்கும் அதிகமான பேர் லைக் செய்துள்ளனர்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜோ ரூட்டை வம்பிழுத்தது ஏன்? பிரசித் கிருஷ்ணா விளக்கம்!

தேர்தல் ஆணையத்துக்கு எதிராக ஆதார அணுகுண்டை வெடிக்கச் செய்யுங்கள்: ராகுலுக்கு ராஜ்நாத் சவால்!

உலகிலேயே தந்தையை வேவு பார்த்த மகன் அன்புமணிதான்! - ராமதாஸ்

பசி, பட்டினி, வலி, அச்சம்... காஸாவில் மக்கள் ஒரு நாளை எப்படிக் கழிக்கிறார்கள்?

“உடல்நலம் பாதிக்கப்பட்டாலும் மக்கள்பணி ஆற்ற வேண்டும்!” முதல்வர் MK Stalin | DMK

SCROLL FOR NEXT