செய்திகள்

'அபியும் நானும்' - சீசன் 2 வேண்டும்: ரசிகர்கள் ஆர்வம்!

''அபியும் நானும்'' தொடர் விரைவில் முடியவுள்ள நிலையில், இந்த தொடருக்கு இரண்டாம் சீசன் எடுக்க வேண்டும் என ரசிகர்கள் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.

DIN

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும்  ''அபியும் நானும்'' தொடர் விரைவில் முடியவுள்ள நிலையில், இந்த தொடருக்கு இரண்டாம் சீசன் எடுக்க வேண்டும் என ரசிகர்கள் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.

சன் தொலைக்காட்சியில் கடந்த 2020 முதல் ''அபியும் நானும்'' தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. அதிக அளவில் குழந்தை நட்சத்திரங்களை மையப்படுத்தி எடுக்கப்பட்டு வரும் இந்த தொடர் பெரியவர்களை மட்டுமின்றி குழந்தைகளையும் கவர்ந்துள்ளது. 

நகைச்சுவைக் காட்சிகளும் வெகுவாக ரசிகர்களை ஈர்த்துள்ளது. பெரியவர்களின் பிரச்னைக்கு குழந்தைகள் திட்டமிட்டு அதனை செயல்படுத்துவது போன்ற பல்வேறு காட்சிகள் ரசிகர்களைக் கவர்ந்தவை. 

அபி என்ற குழந்தையை மையப்படுத்தி இந்தத் தொடர் அமைக்கப்பட்டுள்ளது. அவரின் வளர்ப்பு தந்தை கார் ஓட்டுநராக பணக்கார வீட்டில் வேலை பார்க்கிறார். அந்த வீட்டின் முதலாளி அபியின் பெற்ற தாய். ஒருகட்டத்துக்கு மேல் அபி தன்னுடைய குழந்தை என முதலாளிக்குத் தெரிகிறது. அவர்களுக்கிடையே நடக்கும் சம்பவங்கள்தான் 'அபியும் நானும்' திரைக்கதை.

இந்த தொடர் வரும் 25ஆம் தேதியுடன் நிறைவடையவுள்ளது. இதனால், அதன் இறுதி எபிஸோடுகளுக்கான முன்னோட்ட (புரோமோக்கள்) விடியோக்கள் வெளியாகியுள்ளன. அதில் 'அபியும் நானும்' தொடர் எனக்கு பிடித்தமான தொடர். விரைவில் அதற்கான இரண்டாம் சீசன் எடுக்க வேண்டும் என கமெண்டுகளில் ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர். 

ராஜா ராணி, பாரதி கண்ணம்மா ஆகிய தொடர்களின் இரண்டாவது சீசன் சமீபத்தில் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், 'அபியும் நானும்' தொடருக்கும் இரண்டாவது சீசன் எடுக்க வேண்டும் என்று ரசிகர்கள் மத்தியில் கோரிக்கை எழுந்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆத்தூா் அருகே இருசக்கர வாகனம் மீது காா் மோதியதில் இருவா் உயிரிழப்பு

ஆத்தூரில் கருமாரியம்மன் கோயில் தேரோட்டம்

மேட்டூா் அணை உபரிநீா் கால்வாயில் அழுகிய மீன்களை அகற்றும் பணி

இலங்கைக் கடற்படையினரால் நம்புதாளை மீனவா்கள் 4 போ் கைது

பெண்ணை வாளால் வெட்டிய இருவா் கைது

SCROLL FOR NEXT