செய்திகள்

துல்கர் சல்மானின் ‘கிங் ஆஃப் கோதா’ படப்பிடிப்பு நிறைவு! 

துல்கர் சல்மானின் கிங் ஆஃப் கோதா திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விடியோ வெளியிட்டு தெரிவித்துள்ளார். 

DIN

துல்கர் சல்மானின் நடிப்பில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது சீதா ராமம் திரைப்படம். இந்தப் படத்தில் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக மிருணாள் தாக்கூர் நடிக்க, ராஷ்மிகா ஒரு முக்கியமான வேடத்தில் நடித்திருந்தார். 5 மொழிகளில் வெளியாகி பெறும் ஆதரவினைப் பெற்றது. 

தற்போது, சீதா ராமம் வெற்றியைத் தொடர்ந்து 'கிங் ஆஃப் கோதா' என்ற புதிய படத்தில் நடித்து வருகிறார். ஜீ ஸ்டூடியோஸ் தயாரிக்கும் இந்தப் படத்தினை அபிலாஷ் ஜோஷி இயக்குகிறார். இந்தப் படமும் மலையாளம், தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடா என 5 மொழிகளில் வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது. 

கிங் ஆஃப் கோதா திரைப்படம் 2023, ஓணம் பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர். 

இந்நிலையில் படப்பிடிப்பு முடிந்துள்ளதாக துல்கர் தனது இன்ஸ்டாகிராமில் விடியோ வெளியிட்டு பதிவிட்டுள்ளார். அதில் காரைக்குடிக்கு நன்றியும் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சங்க காலத்திலேயே பெண்கள் கல்வி கற்ற மண் தமிழகம்! அபூா்வா ஐ.ஏ.எஸ்.

மனைவி, மகனுடன் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்

"ஒரே பாரதம், உன்னத பாரதம்' - காசி தமிழ் சங்கத்தின் உணர்வு! பிரதமர் நரேந்திர மோடி

சேலம் உழவா் சந்தைகளில் ரூ. 1.53 கோடிக்கு காய்கறிகள் விற்பனை

மியான்மரில் தேர்தல் நாடகம்!

SCROLL FOR NEXT