செய்திகள்

’சிம்புவை இழுக்காதீர்கள்..’: கோரிக்கை வைத்த ‘பத்து தல’ இயக்குநர்

பத்து தல திரைப்படத்தின் புரோமோ விடியோ குறித்து இயக்குநர் கோரிக்கை வைத்துள்ளார்.

DIN

பத்து தல திரைப்படத்தின் புரோமோ விடியோ குறித்து இயக்குநர் கோரிக்கை வைத்துள்ளார்.

கன்னடத்தில் சிவராஜ்குமார் நடிப்பில் வெற்றிபெற்ற மஃப்டி திரைப்படம் தமிழில் சிம்பு நடிப்பில் பத்து தல என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு படமாக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தை 'சில்லுனு ஒரு காதல்', 'நெடுஞ்சாலை' படங்களை இயக்கிய கிருஷ்ணா இயக்கி உள்ளார்.

கௌதம் கார்த்திக், பிரியா பவானி ஷங்கர் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இந்தப் படத்தை ஸ்டுடியோ கிரீன் சார்பாக ஞானவேல் ராஜா தயாரித்துள்ளார். 

இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது. இந்நிலையில் சிம்புவின் பிறந்தநாளை முன்னிட்டு ‘பத்து தல’ படத்தின் முதல் பாடலான ‘நம்ம சத்தம்’ பாடலின் லிரிக்கல் விடியோவை படக்குழுவினர்  வெளியிட்டனர்.

இந்நிலையில், இப்படத்தின் புரோமோ விடியோ ஒன்றை படக்குழு உருவாக்கி வருகிறார்கள். இதில் சிம்பு நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி வந்தது.

இதனை மறுக்கும் விதமாக இயக்குநர் கிருஷ்ணா ‘புரோமோ விடியோவில் நடிகர் சிம்பு நடிக்கவில்லை. நாங்கள் திட்டமிட்டே இந்த ஐடியாவில் புரோமோ விடியோவை எடுத்து வருகிறோம். அவருடையப் பெயரை தவறாகப் பயன்படுத்த வேண்டாம். பத்து தல படத்தின் விளம்பர புரோமோஷன் குறித்து தயாரிப்பாளர்களுக்கு தெளிவான யோசனை உள்ளது. நாங்கள் வெறுப்புப் பேச்சை வெறுக்கிறோம்’ என டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பனியில் இருந்து ரோஜா மலா்களை காக்க பசுமைக்குடிலில் பராமரிக்கப்படும் செடிகள்

பள்ளிகொண்டா உத்தர ரங்கநாதா் கோயிலில் நகைகள் மாயம்?: விசாரணை நடத்த பாஜக கோரிக்கை

சீரான குடிநீா் விநியோகம் கோரி ஆட்சியரிடம் மனு

பொறியியல் பணிகளால் விழுப்புரம் மாா்க்கத்தில் ரயில் சேவையில் மாற்றம்

தமிழக முதல்வா் நாளை வருகை: திண்டிவனத்தில் முன்னேற்பாட்டுப் பணிகள் தீவிரம்

SCROLL FOR NEXT