முகப்பு
செய்திகள்

அனிருத் இசையில் ஜுனியர் என்டிஆர்! 

இசையமைப்பாளர் அனிருத் இசையில் ஜுனியர் என்டிஆர்-இன் புதிய படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது. 

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 11:46 AM
பகிர்:

ராஜமௌலி இயக்கத்தில் ஜுனியர் என்டிஆர், ராம் சரண், ஆலியா பட் உள்ளிட்ட பலர் நடித்த ஆர்ஆர்ஆர் திரைப்படம் மாபெறும் வெற்றி பெற்றது.

தற்போது, ஜுனியர் என்டிஆர் தனது 30வது படத்தில் நடிக்க உள்ளார். இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. பிரபல தெலுங்கு இயக்குநர் கொரடால சிவா இயக்கத்தில் நடிக்க உள்ளார். 

இந்தப் படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் துவங்க உள்ளது. ஏப்ரல் மாதம் 5ஆம் நாள் திரையரங்குகளில் வெளியாகுமென படக்குழு தெரிவித்துள்ளது. மேலும் படக்குழு ரசிகர்களுக்கு ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துளது.

Advertisement

தெலுங்கில் அனிருத் 2017இல் இசையமைக்க ஆரம்பித்தார். 2018இல் யு டர்ன், ஜெர்ஸி ஆகிய படங்களுக்கும் 2019இல் கேங்க் லீடர் படத்திற்கும் இசையமைத்தார். இதனைத் தொடர்ந்து 2023இல் ஜுனியர் என்டிஆர் புதிய படத்துக்கும் இசையமைக்க  உள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments