செய்திகள்

நடிகைகளின் புத்தாண்டு வாழ்த்தும், புகைப்படமும்!

பிரபல நடிகைகள் தங்களின் ரசிகர்களுக்கு புகைப்படத்துடன் புத்தாண்டு வாழ்த்துகளை பகிர்ந்துள்ளனர்.

DIN

பிரபல நடிகைகள் தங்களின் ரசிகர்களுக்கு புகைப்படத்துடன் புத்தாண்டு வாழ்த்துகளை பகிர்ந்துள்ளனர்.

புத்தாண்டை முன்னிட்டு பல்வேறு நடிகர், நடிகைகள் தங்களின் ரசிகர்களுக்கு வாழ்த்துகளை பகிர்ந்து வருகின்றனர். சில பிரபலங்கள் புத்தாண்டை முன்னிட்டு புதிய அப்டேட்களையும் வெளியிட்டு வருகின்றனர்.

மாளவிகா மோகனன்

மாஸ்டர், மாறன் உள்ளிட்ட படங்கள் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான மாளவிகா மோகனன் புத்தாண்டை முன்னிட்டு இமய மலைப் பகுதிகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

இந்தாண்டின் அழகான முதல் நாள் என இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

கீர்த்தி சுரேஷ்

தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகை கீர்த்தி சுரேஷ், “2023-ஐ எதிர்நோக்கிறேன். லவ் யூ ஆல் என டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

அஞ்சலி

அங்காடி தெரு படத்தின் மூலம் ரசிகர்களின் மனதை கொள்ளையடித்த அஞ்சலி, “அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துகள்” எனப் பதிவிட்டு புகைப்படம் ஒன்றையும் பகிர்ந்துள்ளார்.

ஐஸ்வர்யா லெக்ஷ்மி

பொன்னியின் செல்வன், கட்டா குஸ்தி என அடுத்தடுத்து ரசிகர்களை ஈர்த்து டிரெண்டிங்கில் உள்ள ஐஸ்வர்யா லெக்ஷ்மி, 2022 பயண விடியோவை வெளியிட்டு 2023-ஆம் ஆண்டை நாம் அனைவரும் சிறப்பாகக் கொண்டாடுவோம். ஐ லவ் யூ எனப் பதிவிட்டுள்ளார்.

ரஷ்மிகா மந்தனா

நடிகர் விஜய்யின் வாரிசு படத்தின் நாயகி ரஷ்மிகா மந்தனா, ஹலோ 2023 எனத் தலைப்பிட்டு கடற்கரையோர புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

பூஜா ஹெட்ஜே

நடிகர் விஜய்யின் பீஸ்ட் படத்தின் நாயகி பூஜா ஜெட்ஜேவும் புத்தாண்டு கொண்டாட்ட புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாராட்டு கிடைக்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

பழங்குடியினா் ஜனநாயக சீா்திருத்தச் சங்க கிளை திறப்பு

ஜெருசலேம் புனிதப்பயணம் மேற்கொண்ட கிறிஸ்தவா்களுக்கு மானியம்

செங்கம் அரசுப் பள்ளியில் நூலக வாரவிழா

போராட்டங்கள் எதிரொலி: குடியாத்தம் எம்எல்ஏ ஆய்வு

SCROLL FOR NEXT