செய்திகள்

‘லவ் டுடே’ ஹிந்தி ரீமேக் பற்றி போனி கபூர் கூறியது என்ன? 

பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற ‘லவ் டுடே’ திரைப்படத்தின் ஹிந்தி ரீமேக் பற்றிய தகவல். 

DIN

கல்பாத்தி எஸ்.அகோரம், கல்பாத்தி எஸ்.கணேஷ், கல்பாத்தி எஸ்.சுரேஷ் ஆகியோர் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் லவ் டுடே. ‘கோமாளி’ புகழ் பிரதீப் ரங்கநாதன் இந்தத் திரைப்படத்தை இயக்கி நாயகனாக நடித்துள்ளார். 

சிறந்த பொழுதுபோக்கு திரைப்படமாக தயாராகியுள்ள ‘லவ் டுடே’ திரைப்படத்தில் பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக 'நாச்சியார்' படத்தில் நடித்த இவானா நடித்துள்ளார்.  சத்யராஜ், ராதிகா சரத்குமார், யோகி பாபு ஆகியோர் முக்கிய வேடங்களிலும் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். கடந்த நவ.4 ஆம் தேதி வெளியான இப்படம் ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்தது. இந்தப் படம் 90 கோடி வசூலானதாகவும் தகவலும் வெளியாகியுள்ளது. 

இப்படத்துக்கு தெலுங்கிலும் ரசிகர்ள் மத்தியில் நல்ல வரவேற்பு இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில், லவ் டுடே திரைப்படம் டிசம்பர் 2ஆம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் என அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.  

ஹிந்தியில் போனி கபூர் இந்தப் படத்தினை தயாரிப்பதாகவும், வருண் தவான் நடிப்பதாகவும் தகவல் வெளியானது. இது குறித்து தயாரிப்பாளர் போனி கபூர் கூறியதாவது: 

லவ் டுடே படத்தின் ரீமெக் உரிமத்தை நான் வாங்கவில்லை. சமூக வலைதளங்களில் இது குறித்து அனைத்து தகவலும் அடிப்படை ஆதாரமற்றது,  போலியானது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ராமதாஸை சந்தித்து நலம் விசாரித்த அன்புமணி

ஜெய்ப்பூரில் அரசு மருத்துவமனையில் தீ விபத்து: 6 நோயாளிகள் பலி

எதிலும் வெற்றி இவர்களுக்கு: தினப்பலன்கள்!

பூந்தமல்லி - சுங்குவாா்சத்திரம் அரசுப் பேருந்து மப்பேடு வரை நீட்டிப்பு

முதல்வரின் தாயுமானவா் திட்டம்: திருவள்ளூா் மாவட்டத்தில் இன்று தொடக்கம்

SCROLL FOR NEXT