’மைக்கேல்’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!
விஜய் சேதுபதி, கௌதம் வாசுதேவ் மேனன் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள ’மைக்கேல்’ திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
புரியாத புதிர், இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் படங்களை இயக்கி கவனம் ஈர்த்த இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் ‘மாநகரம்’ புகழ் சந்தீப் கிஷன் நாயகனாக நடித்துள்ள திரைப்படம் ‘மைக்கேல்’.
ஸ்ரீ வெங்கடேஷ்வரா ஸ்ரீனிவாஸ் தயாரிப்பில் உருவான இந்தப் படத்தில் விஜய் சேதுபதி, கௌதம் வாசுதேவ் மேனன் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும், வரலட்சுமி சரத்குமார், அனுசுயா, திவ்யன்ஷா கௌசிக் உள்ளிட பலர் நடித்துள்ளனர்.
இதையும் படிக்க: ராஜமெளலியுடன் இணைகிறாரா கமல்?
Advertisement
Advertisement
ஏற்கனவே இந்தப் படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்ற நிலையில் ’மைக்கேல்’ பிப்ரவரி 3 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என 5 மொழிகளில் வெளியாக உள்ளது.