நாளை வெளியாகிறது வாரிசு டிரைலர்?
வாரிசு திரைப்படத்தின் டிரைலர் நாளை(ஜன.4) வெளியிடப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வாரிசு திரைப்படத்தின் டிரைலர் நாளை(ஜன.4) வெளியிடப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரபல தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள திரைப்படம் 'வாரிசு'. இந்தப் படத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ளார். சங்கீதா, ஷியாம், பிரகாஷ்ராஜ், சரத் குமார் உள்ளிட்டோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
பொங்கலுக்கு வெளியாகும் இப்படத்துக்கு இசையமைப்பாளர் தமன் இசையமைத்துள்ளார்.
Advertisement
இதையும் படிக்க | ரூ.3000 கோடி பட்ஜெட்: பிரபல தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு!
இந்நிலையில், படத்தின் இசை வெளியீட்டு விழா டிசம்பர் 24-ஆம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர்கள் பிரகாஷ்ராஜ், சரத்குமார், ராஷ்மிகா மந்தனா, ஷாம் என பலர் கலந்து கொண்டனர்.
இந்த விழாவில், அனிருத் பாடிய பாடல் உள்பட படத்தின் அனைத்து பாடல்களும் வெளியிடப்பட்டது. இதில், நடிகர் விஜய் ரசிகர்கள் மத்தியில் பேசிய விடியோக்கள் சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகின்றது.
வாரிசு திரைப்படத்தின் டிரைலர் புத்தாண்டை முன்னிட்டு ஜனவரி 1-ஆம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சென்சார் பணிகள் முடிவடையாததால் தள்ளிப் போனதாக தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில், வாரிசு திரைப்படத்தின் டிரைலர் நாளை வெளியாகும் என்றும், இதற்கான அறிவிப்புகள் இன்று மாலை 4 மணிக்கு படக்குழுவினர் வெளியிடுவார்கள் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.