செய்திகள்

பொம்மை நாயகி: முதல் பாடலில் பாசமான தந்தை, அன்பான கணவராக யோகிபாபு அசத்தல்! 

யோகி பாபு நடிப்பில் உருவாகியிருக்கும் பொம்மை நாயகி படத்திலிருந்து முதல் பாடல் வெளியாகியுள்ளது. 

DIN

இயக்குநர் பா.ரஞ்சித் தயாரிப்பு நிறுவனமான நீலம் புரொடக்‌ஷன்ஸ் மற்றும் யாழி பிலிம்ஸ் இணை தயாரிப்பில் உருவாகிவரும் பொம்மை நாயகி  திரைப்படத்தில் பிரபல காமெடி நடிகரான யோகி பாபு நடித்துள்ளார்.  இப்படத்தை ஷான் இயக்குகிறார்.

பரியேறும் பெருமாள், கபாலி, ஜெய் பீம் படங்களில் நடித்து கவனம்பெற்ற  நடிகை சுபத்ரா, யோகி பாபுவின் மனைவியாக நடித்துள்ளார். அறிவு, கபிலன், இளைய கம்பன் மற்றும் சிலர் படத்திற்கு பாடல்கள் எழுதியுள்ளார்கள்.  சுந்தரமூர்த்தி கே.எஸ். இசையமைத்துள்ளார். 

இயக்குநர் பா.ரஞ்சித் தயாரிப்பில் நடிகர் யோகி பாபு நடிக்கும் ‘பொம்மை நாயகி’ படம் பிப்ரவரி 3ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் நேற்று இந்தப் படத்தின் முதல்பாடலான ‘அடியே ராசாத்தி’ பாடல் வெளியாகியுள்ளது. கபிலன் இந்தப் பாடலை எழுதியுள்ளார். இதில் யோகிபாபு பாசமான தந்தையாக, அன்பான கணவனாக இருப்பதை பாரத்த ரசிகர்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதுப்பொலிவுடன் தி சென்னை சில்க்ஸ்! வைரலாகும் ஏஐ விளம்பரம்!

சீனா தங்கம் வாங்கிக் குவிப்பது ஏன்? விரிவான பார்வை!

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் மீது தாக்குதல் முயற்சி

ரூ. 300 கோடி வசூலித்த ஓஜி!

பாகிஸ்தானை வென்ற இந்திய மகளிர் அணி! ஆபரேஷன் சிந்தூர் தொடர்கிறது! -பாஜக

SCROLL FOR NEXT