செய்திகள்

நாளை வெளியாகிறது பதான் டிரைலர்: ரசிகர்கள் கொண்டாட்டம்

ஷாருக்கானின் பதான் திரைப்படத்தின் டிரைலர் நாளை வெளியாகவுள்ளது. 

DIN

ஷாருக்கானின் பதான் திரைப்படத்தின் டிரைலர் நாளை வெளியாகவுள்ளது. 

ஷாருக்கான் நடிப்பில் ஜனவரி 25ஆம் திரைக்கு வரவிருக்கும் படம் பதான். படத்தில் தீபிகா படுகோன், ஜான் ஆப்ரகாம், டிம்பள் கபாடியா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்னர். இப்படத்தை ஆதித்யா சோப்ரா இயக்கியுள்ளார். யாஷ் ராஜ் நிறுவனம் தயாரிக்கிறது. யாஷ் ராஜ் தயாரிப்பின் 50வது படம் இதுவாகும். இப்படம் இந்தி, தமிழ், தெலுங்கு மொழிகளில் வெளியாகவுள்ளன. 

இந்த படத்தில் இடம் பெற்றுள்ள ''பேஷாரம் ராங்..'' பாடலில் ஷாருக்கானுடன் காவி உடை அணிந்தவாறு தீபிகா படுகோன் நடனமாடுவதற்கு பாஜக தரப்பில் கடும் எதிர்ப்புகள் கிளம்பியது. ஹிந்துக்களின் உணர்வுகளை புண்படுத்தும் வகையில் அந்த நடனக் காட்சிகள் இருப்பதால், பாஜக ஆளும் மாநிலங்களில் பதான் படத்தை திரையிட விடமாட்டோம் என அவர்கள் தெரிவித்துள்ளனர். 

இந்த நிலையில் படத்தின் டிரைலர் நாளை காலை 11 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இதனை அவரது ரசிகர்கள் இணையதளங்களில் கொண்டாடி வருகின்றனர். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கம்பனின் தமிழமுதம் - 65: காற்றுக் கொந்தளிப்பில் விமானங்கள்!

தன்னை வியத்தலினால் கேடு

போரை நிறுத்திய புலவர்கள்!

நீர்க்குமிழிபோல வாழ்க்கை

இந்த வாரம் கலாரசிகன் - 28-09-2025

SCROLL FOR NEXT