’துணிவு’ வெளியானதும் அஜித் அழைத்து இதுதான் சொன்னார்: மஞ்சு வாரியர்
அஜித்தின் துணிவும் நடிகர் விஜய் நடிப்பில் உருவான ‘வாரிசு’ திரைப்படமும் நேற்று திரையரங்குகளில்..
அஜித்தின் துணிவும் நடிகர் விஜய் நடிப்பில் உருவான ‘வாரிசு’ திரைப்படமும் நேற்று திரையரங்குகளில் வெளியானது. இரு படங்களும் ஒரே நாளில் மோதிக்கொண்டதால் இருவரின் ரசிகர்களும் கொண்டாட்டத்தில் உள்ளனர்.
குறிப்பாக, துணிவு திரைப்படம் நள்ளிரவில் வெளியானதால் தமிழகம் முழுவதும் ரசிகர்கள் முந்தியடித்துக்கொண்டு குவிந்தனர். இதனால் பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ரசிகர்கள் ஒரே நேரத்தில் அதிக அளவில் குவிந்ததால் பொதுச்சொத்துக்களுக்கு சேதங்களும் ஏற்பட்டன.
அதனைத் தொடர்ந்து வாரிசு அதிகாலை 4 மணிக்கு திரையிடப்பட்டது. இரண்டு படங்களும் கலவையான விமர்சனங்களையே பெற்று வருகிறது.
இதையும் படிக்க: ’துணிவு - வாரிசு’ முதல்நாள் வசூலில் இவர்தான் நம்.1!
மேலும், தமிழகத்தில் முதல்நாள் வசூலில் துணிவு திரைப்படம் ரூ.17.5 கோடியையும் வாரிசு திரைப்படம் ரூ.17 கோடியையும் குவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், கேரளத்தில் இப்படத்தை ரசிகர்களுடன் கண்ட நடிகை மஞ்சு வாரியரிடம் ‘துணிவு வெளியான பின்பு அஜித் குமார் அழைத்தாரா?’ என கேள்வியெழுப்பட்டது.
அதற்கு மஞ்சு வாரியர், ‘அஜித் சார் அழைத்தார். தன் மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டார். மொத்த படக்குழுவும் கொண்டாட்டத்தில் உள்ளனர்.’ எனத் தெரிவித்துள்ளார்.