செய்திகள்

பிக் பாஸ் சீசன் 6 நிறைவு: டிவிட்டரில் தொடரும் ரசிகர்களின் மோதல்!

பிக் பாஸ் தமிழ் சீசன் 6 போட்டி நேற்று இரவுடன் நிறைவடைந்த நிலையில், டிவிட்டர் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் ரசிகர்கள் தொடர்ந்து மோதிக் கொண்டுள்ளனர்.

DIN

பிக் பாஸ் தமிழ் சீசன் 6 போட்டி நேற்று இரவுடன் நிறைவடைந்த நிலையில், டிவிட்டர் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் ரசிகர்கள் தொடர்ந்து மோதிக் கொண்டுள்ளனர்.

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 6 போட்டி கடந்த அக்டோபர் 9ஆம் தேதி தொடங்கியது. இந்த சீசனில் ராபர்ட் மாஸ்டர், ரச்சிதா, விக்ரமன், ஆயிஷா, அமுதவாணன், பாடகர் ஏடிகே, மைனா நந்தினி, ஜனனி, அஷீம், தனலட்சுமி, கதிரவன், மகேஸ்வரி, மணிகண்டா, குயின்ஸி, ராம், சிவின், நிவாசினி, செரினா, அசல், சாந்தி, ஜி.பி.முத்து உள்ளிட்ட 21 போட்டியாளர்கள் பங்கேற்றனர். இந்த போட்டியை நடிகர் கமல்ஹாசன் தொடர்ந்து 6-வது முறையாக தொகுத்து வழங்கினார்.

100 நாள்களை கடந்து இறுதி வாரத்தில் அஷீம், விக்ரமன், சிவின், மைனா, அமுதவாணன், கதிரவன் உள்ளிட்ட 6 பேரும் இறுதி வாரத்திற்குள் நுழைந்தனர். கதிரவன் மற்றும் அமுதவாணன் பணப்பெட்டியுடன் போட்டியிலிருந்து வெளியேறினர். மிட் வீக் எவிக்‌ஷனில் மைனா வெளியேற்றப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து, நேற்று இறுதிப் போட்டி நடைபெற்றது. முதல்முறையாக முதல் மூன்று போட்டியாளர்களுமே இறுதி மேடைக்கு அழைத்து வரப்பட்டனர்.
இதில், அஷீம் முதலிடம், விக்ரமன் இரண்டாமிடம், சிவின் மூன்றாமிடம் பெற்றனர்.

இந்நிலையில், இறுதிப் போட்டி நிறைவடைந்த 12 மணிநேரத்தை கடந்தும் டிவிட்டர் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் அஷீம், விக்ரமன் ரசிகர்கள் மோதலில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த சீசன் தொடங்கியது முதலே அஷீம், விக்ரமன் மற்றும் சிவின் ஆகியோருக்கு ஆதரவாக பல்வேறு தரப்பினர் டிவிட்டரில் பதிவிட்டும், ஹேஷ் டேக்குகளை டிரெண்ட் செய்தும் வந்தனர்.

அஷீம் ஆதரவாளர்கள் விக்ரமனை தாக்கியும், விக்ரமன் ஆதரவாளர்கள் அஷீமுக்கு எதிராகவும் டிவிட்டரில் நாள்தோறும் பதிவிட்டு வந்தனர்.

இந்த சீசனில் அஷீம் பலமுறை கோபத்தில் சக போட்டியாளர்களை கடுமையான வார்த்தைகளால் விமர்சித்து பேசியதற்கு கமல் பலமுறை கண்டனம் தெரிவித்திருந்தார்.

இதற்கிடையே முதல்முறையாக மக்கள் சார்பாக இந்த சீசனில் கலந்து கொண்ட மூன்றாம் பாலினத்தை சேர்ந்த சிவினுக்கு இறுதிகட்டத்தில் ஆதரவு அதிகரித்திருந்தது.

கடந்த 10 நாள்களாகவே டிவிட்டரில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு போட்டியாளர் டிரெண்டிங்கில் இருந்தனர்.

இந்நிலையில், நேற்று அஷீம் வெற்றியாளராக அறிவிக்கப்பட்ட பிறகும், விக்ரமன் மற்றும் சிவினுக்கு ஆதரவாக பல்வேறு ட்வீட்கள் பதிவிடப்பட்டு வருகின்றது.

இத்தனை மோதல்களுக்கும் காரணம், கடந்த சீசன்களில் இல்லாத அளவிற்கு வெற்றியாளர் யார் என்று கணிக்க முடியாததே!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பத்திரிகையாளர் சந்திப்பில் வித் லவ் படக்குழுவினர் - புகைப்படங்கள்

மலேசியா: பிரதமர் மோடி முன்னிலையில் 800 கலைஞர்கள் நடனம்! சாதனைப் புத்தகத்தில் இடம்பெறுமா?

டி20 உலகக் கோப்பை: ஹர்ஷித் ராணா விலகல், மாற்று வீரர் அறிவிப்பு

மார்க்சியத்தை எந்த சக்தியாலும் வீழ்த்த முடியாது! - திருமா

விஜய்க்கு விதித்த ரூ. 1.50 கோடி அபராதம் செல்லும்! | செய்திகள் : சில வரிகளில் | 6.2.26

SCROLL FOR NEXT