செய்திகள்

பொன்னியின் செல்வன் 2 குறித்து புதிய அப்டேட்!

DIN

பொன்னியின் செல்வன் 2-வது பாகம் குறித்து புதிய அப்டேட்டை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.

இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் கடந்தாண்டு செப்டம்பர் 30 ஆம் தேதி உலகெங்கிலும் வெளியான  ’பொன்னியின் செல்வன்’ திரைப்படம் ரூ.500 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாகவும் வெளிநாடுகளில் மட்டும் இந்தப் படம் ரூ.130 கோடி அளவுக்கு வசூலித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழகத்தில் மட்டும் பொன்னியின் செல்வன் திரைப்படம் ரூ.230 கோடிக்கும் அதிகமாக வசூலித்து  வசூல் சாதனையில் முதல் இடத்துக்கு முன்னேறியது.

பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் இரண்டாம் பாகத்திற்கான மீதமுள்ள பணிகளை விரைவில் முடிக்க படக்குழு தீவிரம் காட்டி வருவதாகவும்,  இப்படத்தை அடுத்தாண்டு(2023) ஏப்ரல் 28 ஆம் தேதி வெளியாக இருப்பதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக தெரிவித்திருந்தது.

உலகளவில் வெளியான பொன்னியின் செல்வன் முதல் பாகமானது, பெரிய திரை, துல்லியமான காட்சிக் கடத்தல்கள், ஒலி அமைப்பு கொண்ட ஐமேக்ஸ் தொழில்நுட்பத்தில் வெளியிடப்பட்டது. தமிழில் வெளியான முதல் ஐமேக்ஸ் திரைப்படம் இதுவாகும்.

இந்நிலையில், இரண்டாம் பாகமும் ஐமேக்ஸ் தொழில்நுட்பத்தில் வெளியாகவுள்ளதாக பொன்னியின் செல்வன் படக்குழு அதிகாரப்பூர்வமாக இன்று அறிவித்துள்ளது.

முதல் பாகத்திலேயே முழுக்க லாபத்தைப் பெற்ற இத்திரைப்படம் 2 ஆம் பாகத்தில் வசூல் வேட்டையை நிகழ்த்த உள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கர்நாடகத்தில் மாலை 6 மணியுடன் பிரசாரம் ஓய்வு

பிரஜ்வலால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நிதியுதவி: கர்நாடக அரசு அறிவிப்பு!

அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

பழுப்பு நிற நிலவு!

ஆடையில்லாத படத்தை பதிவிட்டு நீக்கிய சமந்தா?

SCROLL FOR NEXT