முகப்பு
செய்திகள்

மாவீரன் டிரைலர் நாளை!

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள மாவீரன் திரைப்படத்தின் டிரைலர் நாளை (ஜூலை 2) வெளியாகவுள்ளது. 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 7:15 PM
பகிர்:


சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள மாவீரன் திரைப்படத்தின் டிரைலர் நாளை (ஜூலை 2) வெளியாகவுள்ளது. 

மண்டேலா திரைப்படத்தின் இயக்குநர் மடோன் அஷ்வின் இயக்கத்தில் மாவீரன் திரைப்படம் உருவாகியுள்ளது. சிவகார்த்திகேயன் - அதீதி ஷங்கர் நடிப்பில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து பின்னணி வேலைகளும் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. சரிதா, இயக்குனர் மிஷ்கின், யோகி பாபு உள்ளிட்ட பலரும் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். 

தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் தயாராகியுள்ள இந்தப் படத்துக்கு பரத் ஷங்கர் இசையமைத்துள்ளார். மாவீரன் திரைப்படம் ஜூலை 14ஆம் தேதி திரையரங்கில் வெளியாகவுள்ளது.

இந்நிலையில், மாவீரன் திரைப்படத்தின் டிரைலர் நாளை (ஜூலை 2) வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
 

முழு கட்டுரையைப் படிக்க →