ஹாரிகா & ஹாஷினி புரடக்ஷன் மற்றும் கீதா ஆர்ட்ஸ் இணைந்து தயாரிக்கும் எட்டாவது படத்தில் பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் இயக்குநர் த்ரிவிக்ரமுடன் நான்காவது முறையாக இணைந்துள்ளார். இந்த கூட்டணி என்றாலே வெற்றிதான். 2012, 2015, 2020 முறையே ஜூலை, சன் ஆஃப் சத்யமூர்த்தி, அல வைகுந்தபுரமுலோ ஆகிய படங்கள் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது.
இதையும் படிக்க: நா ரெடி பாடலுக்கு நடனமாடிய கிரிக்கெட் வீரர்: வைரல் விடியோ
கடைசியாக வந்த அல வைகுந்தபுரமுலோ திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அதனால் இவர்களது கூட்டணியை ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் படத்தின் அறிவிப்பு போஸ்டர் வெளியாகியுள்ளது.
இதையும் படிக்க: யார் கமலின் பெரிய ரசிகர்? இந்த சண்டையில் சட்டை கிழியாது: லோகேஷை புகழ்ந்த கௌதம் மேனன்!
இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். முதல் இரண்டு படங்களுக்கு தேவி ஸ்ரீ பிரசாந்த் இசை. அல வைகுந்தபுரமுலோ படத்தில் தமன் இசை பிடிக்கவே மீண்டும் தமனிடம் சென்றுள்ளது படக்குழு.
படத்தின் மற்ற விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படுமென படக்குழு தெரிவித்துள்ளது. தற்காலிகமாக படத்திற்கு அல்லு அர்ஜுன் 22 (ஏஏ22) எனப் பெயரிடப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பினால் அல்லு அர்ஜுன் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.