லியோவில் இணைந்த பிரபல பாலிவுட் இயக்குநர்?
விஜய் நடிப்பில் உருவாகி வரும் லியோ படத்தில் மேலும் ஒரு பிரபல பாலிவுட் இயக்குநர் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
விஜய் நடிப்பில் உருவாகி வரும் லியோ படத்தில் மேலும் ஒரு பிரபல பாலிவுட் இயக்குநர் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் லியோ படத்தின் படப்பிடிப்புகள் நடைபெற்று வருகின்றன. இந்த படத்தில் த்ரிஷா, சஞ்சய் தத், இயக்குநர்கள் மிஷ்கின், கௌதம் மேனன் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்து வருகின்றனர்.
இப்படம் வெளியீட்டிற்கு முன்பே ஓடிடி, இசை உரிமம், விநியோக உரிமம் என ரூ.350 கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் ஈட்டியுள்ளதாகவும் கூறப்படுகிறது. லியோ படம் இந்தாண்டு அக்டோபர் மாதம் திரைக்கு வருகிறது.
இதையும் படிக்க | பிரபல யூடியூபர் இயக்கத்தில் நயன்தாரா!
அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தின் முதல் பாடலான 'நா ரெடி' விஜய் குரலில் வெளியாகி வைரலாகியுள்ளது.
இந்நிலையில், பாலிவுட்டின் முன்னணி இயக்குநரும், நடிகருமான அனுராக் காஷ்யாப், லியோ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முதல்கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் முடிவடைந்த நிலையில், விடுபட்ட சில காட்சிகள் காஷ்மீரில் படமாக்கும் பணி நடைபெற்று வருகின்றது. அத்துடன் அனுராக் காஷ்யாப் நடிக்கும் காட்சிகளும் படமாக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.