பிரபல தெலுங்கு நடிகை தனது விவாகரத்து குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை நிஹாரிகா. இவர் தெலுங்கு நடிகர் சிரஞ்சிவின் தம்பி மகள் ஆவார். இவர் தமிழில் நடிகர் விஜய் சேதிபதி நடிப்பில் வெளியான ஒரு நாள் பாத்து சொல்றேன் என்ற படத்தில் அறிமுகமானர்.
இவர் கடந்த 2020 ஆம் ஆண்டு சைதன்யா என்பவரை காதலித்து திருமணம் கொண்டார். நிஹாரிகாவின் கணவர் சைதன்யா தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருவதாக கூறப்படுகிறது.
கடந்த சில மாதங்களாகவே நிஹாரிகா மற்றும் சைதன்யா இருவருக்கும் இடையே பிரச்னை இருந்ததாகவும், இருவரும் பிரிந்து வாழ்ந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், நடிகை நிஹாரிகா பிரிவு குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதில், "நானும், சைதன்யாவும் ஒருமனதாக பிரிய முடிவு எடுத்துள்ளோம். ஆதரவாக இருந்த குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு நன்றி. புதிய வாழ்க்கையை ஏற்றுகொள்ள தேவையான ப்ரைவசியை கொடுங்கள். புரிந்து கொண்டதற்கு நன்றி.” எனத் தெரிவித்துள்ளார்.
நடிகை நிஹாரிகாவின் விவாகரத்து குறித்த அறிவிப்பு தெலுங்கு திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.