முகப்பு
செய்திகள்

விஜய் - லோகேஷ் கனகராஜ் - ராம் சரண் சந்திப்பு... இதற்காகவா?

நடிகர் விஜய் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜை நடிகர் ராம் சரண் சந்தித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 7:17 PM
பகிர்:


லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் லியோ படத்தின் படப்பிடிப்புகள் நடைபெற்று வருகின்றன. இந்த படத்தில் த்ரிஷா, சஞ்சய் தத், இயக்குநர்கள் மிஷ்கின், கௌதம் மேனன் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்து வருகின்றனர்.

இப்படம் வெளியீட்டிற்கு முன்பே ஓடிடி, இசை உரிமம், விநியோக உரிமம் என ரூ.350 கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் ஈட்டியுள்ளதாகவும் கூறப்படுகிறது. லியோ படம் இந்தாண்டு அக்டோபர் மாதம் திரைக்கு வருகிறது.

அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தின் முதல் பாடலான 'நா ரெடி' விஜய் குரலில் வெளியாகி வைரலானது.

லோகேஷ் கனகராஜ் இயக்கிய விக்ரம் திரைப்படத்தின் கடைசி காட்சியில் ‘ரோலக்ஸ்’ என்ற சிறப்புத் தோற்றத்தில் சூர்யா நடித்தது போலவே, லியோ படத்திலும் சிறப்புத் தோற்றம் ஒன்று இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்காக லியோ படக்குழுவினர் நடிகர் தனுஷுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

ஏற்கெனவே, பாலிவுட் இயக்குநரும் நடிகருமான அனுராக் காஷ்யாப் படத்தில் இணைந்துள்ளதாகவும், அவரின் காட்சிகள் காஷ்மீரில் எடுக்கப்படவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தது. 

இந்நிலையில், மீண்டும் ஆச்சரியத்தை ஏற்படுத்தும் வகையில் நடிகர் ராம் சரண் நேற்று விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜ் இருவரையும் தனியாக சந்தித்திருக்கிறார். இது மரியாதை நிமித்தமான சந்திப்பாக இருக்கலாம் என்றும் லியோவில் பல பட்டாளங்கள் இணைந்துள்ள நிலையில், ராம் சரணை வைத்து என்ன செய்யப் போகிறார்களோ என்றும் கருத்துக்கள் பரவி வருகின்றன!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.