டோவினோ தாமஸுக்கு ஜோடியாகும் த்ரிஷா!
டோவினோ தாமஸ் படத்தில் நடிகை த்ரிஷா கதாநாயகியாக நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழில் மாரி - 2 படத்தின் மூலம் அறிமுகமானவர் டோவினோ தாமஸ். மலையாளத்தில் 2012 முதலே நடிக்க ஆரம்பித்தவர் என்னு நிண்டே மொய்தீன், மாயநதி, தீவண்டி, எண்ட உம்மாண்டே பேரு, மின்னல் முரளி, தள்ளுமாலா என பல நல்ல படங்களில் நடித்துள்ளார்.
சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான 2018 திரைப்படமும் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது.
இதையும் படிக்க: சாதனை படைத்த சலார் டீசர்!
இந்நிலையில், டோவினோ நடிப்பில் பெரிய வெற்றியைப் பெற்ற ‘ஃபாரன்சிக்’ படத்தை இயக்கிய அகில் பால் மற்றும் அனாஸ் கான் இயக்கத்தில் ’ஐடென்டி’ என்கிற புதிய படத்தில் நடிக்க உள்ளார்.
இப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை த்ரிஷா நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.