சலார் டீசர்: 100 மில்லியன் (10 கோடி) பார்வைகளை கடந்து சாதனை! படக்குழு நெகிழ்ச்சி!
இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் உருவாகியுள்ள சலார் படத்தின் டீசர் 100 மில்லியன் (10 கோடி) பார்வைகளை கடந்து சாதனை படைத்துள்ளது.
இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் நடிகர் யஷ் நடிப்பில் உருவான கேஜிஎஃப் திரைப்படம் வசூலில் புதிய சாதனையை அடைந்ததுடன் வெளியான நாளிலிருந்து தற்போது வரை அந்த படத்தின் பிரமாண்டம் குறித்து பலரும் பாராட்டி பேசி வருகின்றனர். இந்திய அளவில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றதுடன் ரூ.1,200 கோடி வசூலையும் அடைந்தது.
அதனைத் தொடர்ந்து, இயக்குநர் பிரஷாந்த் நீல் தற்போது நடிகர் பிரபாஸை நாயகனாக வைத்து ‘சலார்’ படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் ஸ்ருதி ஹாசன் நாயகியாக நடிக்கிறார். பிரித்விராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
சலார் திரைப்படம் வரும் செப்டம்பர் 28 ஆம் தேதி திரைக்கு வரும் என அப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஹொம்பலே ஃபிலிம்ஸ் ஏற்கனவே அறிவித்திருந்தது.
இதையும் படிக்க: நடிகர் டோவினோ தாமஸ் படத்தில் த்ரிஷா: அதிகாரபூர்வ அறிவிப்பு!
ஜூலை 6ஆம் நாள் அதிகாலை 5.12 மணிக்கு சலார் (முதல் பாகம்) படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்ற நிலையில், தற்போது யூடியூப்பில் 10 கோடி(100 மில்லியன்) பார்வைகளைக் கடந்து சாதனை படைத்துள்ளது.
படக்குழு இதற்கு நன்றி தெரிவித்து தனது நெகிழ்ச்சியை தெரிவித்துள்ளது.