செய்திகள்

ஆர்ஆர்ஆர் - 2 உருவாக்க திட்டம்!

ஆர்ஆர்ஆர் திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க ராஜமௌலி திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

DIN

இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் அல்லுரி சீதா ராமராஜூ (ராம் சரண்), கொமரம் பீம்(ஜூனியர் என்டிஆர்) என்கிற இரு சுதந்திரப் போராட்ட வீரர்களின் வாழ்க்கையை முன்வைத்து உருவாக்கப்பட்ட ‘ஆர்ஆர்ஆர்’ திரைப்படம் வெளியாகி பெரிய வெற்றியைப் பதிவு செய்ததுடன் உலகளவில் ரூ. 1200 கோடிக்கும் அதிகமான வசூலை அடைந்துள்ளது.

இப்படத்தில் அஜய் தேவ்கன், ஆலியா பட், சமுத்திரக்கனி, ஒலிவியா மாரிஸ், ஸ்ரேயா சரண் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். 

இந்நிலையில், நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்ட ராஜமௌலியின் தந்தையும் ஆர்ஆர்ஆர் பட திரைக்கதை ஆசிரியருமான விஜயேந்திர பிரசாத், ‘ஆர்ஆர்ஆர் திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க திட்டமிட்டு வருகிறார்கள். ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர். ஆகியோர்  2-ம் பாகத்திலும் நடிப்பார்கள். முன்னணி ஹாலிவுட் பட நிறுவனம் தயாரிக்க இருக்கிறது. ராஜமௌலி அல்லது அவரின் மேற்பார்வையில் வேறு இயக்குநர் இயக்கலாம்’ எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்தியாவுடன் மீண்டும் வா்த்தகம்: சீனா பூா்வாங்க ஒப்புதல்!

சென்னை விமானநிலையத்தில் மடிக்கணினி திருட்டு: ஒருவா் கைது

ஃபிஜி பிரதமா் இந்தியா வருகை: பிரதமா் மோடியுடன் இன்று சந்திப்பு!

யுஎஸ் ஓபன் கிராண்ட்ஸ்லாம்: வெற்றியுடன் தொடங்கிய எம்மா ரடுகானு!

பணம் மோசடி புகாா்: பேருந்து நடத்துநா் மீது வழக்கு

SCROLL FOR NEXT