செய்திகள்

சந்திரமுகி 2: முதல் பாடல் வெளியீடு எப்போது?

DIN

சந்திரமுகி 2 படத்தின் முதல் பாடல் எப்போது வெளியாகும் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 2005 ஆம் ஆண்டு ரஜினிகாந்த் நடிப்பில் பி.வாசு இயக்கத்தில் வெளியான சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகத்தில் ராகவா லாரன்ஸ் நடித்துள்ளார். சந்திரமுகி-1 திரைப்படம் 200 நாட்களுக்கு மேல் திரையரங்குகளில் காட்சிப்படுத்தப்பட்டு பெரும் வெற்றி பெற்றதோடு மிக அதிகமான வசூலையும் குவித்தது குறிப்பிடத்தக்கது.  

லைகா புரடக்ஷன் தயாரிப்பில் ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகியுள்ள சந்திரமுகி 2 படத்திற்கு ஆஸ்கர் வென்ற எம்.எம்.கீரவாணி இசையமைக்கிறார். ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார். கலை - தோட்டா தரணி.  மேலும், கங்கனா ரணாவத், ராதிகா, ஸ்ருஷ்டி, நகைச்சுவை நடிகர் வடிவேலு முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது. இந்நிலையில், இப்படம் வருகிற விநாயகர் சதுர்த்தியை(செப்.19) முன்னிட்டு வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக தெரிவித்தது. இப்படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.

நடிகர் ராகவா லாரன்ஸ் தன்னுடைய கதாபாத்திரத்திற்கான டப்பிங் பணியை தொடங்கிய நிலையில், அதற்கான அறிவிப்பை லைகா நிறுவனம் முன்னதாக தெரிவித்திருந்தது.

இந்நிலையில், சந்திரமுகி 2 படத்தின் முதல் பாடல் அடுத்த மாதம் வெளியாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இப்படத்தின் இசை வெளியீட்டு விழா மிக பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மூளை வளர்ச்சி குன்றிய மகனின் கல்விக்காக போராடும் தாய்!

எழில் ஓவியம்... அதுல்யா ரவி!

தமிழ்நாட்டில் அடுத்த மூன்று நாள்களுக்கு அதி கனமழை! | செய்திகள்: சிலவரிகளில் | 18.05.2024

மக்களவை தேர்தல்: மூத்த அரசியல் தலைவர்கள் வீட்டிலிருந்தபடியே வாக்குப்பதிவு

மருத்துவ கடைநிலை ஊழியர்களுக்கு சுழற்சி முறையில் பணிநேரம்!

SCROLL FOR NEXT