செய்திகள்

கங்குவா க்ளிம்ஸ் விடியோ: எத்தனை மணிக்கு வெளியாகும் தெரியுமா? 

நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகிவரும் கங்குவா படத்தின் க்ளிம்ஸ் விடியோ குறித்த புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. 

DIN

அண்ணாத்த திரைப்படத்திற்கு பின் சிறுத்தை சிவா இயக்கும் படத்தில் சூர்யா நடிக்கிறார். 'கங்குவா' எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். தேவி ஸ்ரீபிரசாத் இசையமைக்கிறார். இதில் சூர்யாவுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை திஷா படானி நடிக்கிறார்.

படத்தின் படப்பிடிப்பு கொடைக்கானலில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.இதன் ஓடிடி உரிமையை அமேசான் பிரைம் நிறுவனம் ரூ.80 கோடிக்கு வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது.

மேலும், கங்குவா படத்தின் பிளாஷ்பேக் காட்சிகளுக்கான படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இதில் வில்லனாக ஒளிப்பதிவாளரும் நடிகருமான நட்டி(நடராஜ்) நடித்து வருவதாக தகவல் வெளியாகியிருந்தது. 

இந்நிலையில், இப்படத்தின் கிளிம்ஸ் விடியோவை நடிகர் சூர்யா பிறந்தநாளன்று (ஜூலை - 23) நள்ளிரவு 12.01மணிக்கு வெளியிட உள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டிரம்ப் - நெதன்யாகுவால் 3 ஆம் உலகப்போர் ஏற்படும்: ஈரான் ராணுவம்

சிறுபான்மையினர் பாதுகாப்பாக வாழும் மாநிலம் தமிழ்நாடு; பாஜக ஆளும் மாநிலங்களில் அவர்களின் நிலை?: கனிமொழி கேள்வி

அமைச்சர் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி

உ.பி.யில் பாபர் மசூதி மீண்டும் கட்டப்படாது: யோகி சர்ச்சைப் பேச்சு

ஆசியாவின் சிறந்த மலைப்பிரதேசங்களின் பட்டியலில் சிம்லாவுக்கு முதலிடம்!

SCROLL FOR NEXT