செய்திகள்

சொத்து மதிப்பு ரூ.170 கோடியா?: ஹிந்தி நடிகர் மனோஜ் பாஜ்பாய் பேட்டி! 

ஹிந்தி நடிகர் மனோஜ் பாஜ்பாய் சொத்து மதிப்பு குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு சிரித்துக்கொண்டே பதிலளித்துள்ளார். 

DIN

1994இல் ஷேகர் கபூர் இயக்கிய பண்டிட் குயின் படத்தில் அறிமுகமானவர். பிரபல தெலுங்கு இயக்குநர் ராம் கோபால் வர்மா இயக்கிய சத்யா படத்தின் மூலம் சினிமாவில் நடித்து மனோஜ் பாஜ்பாயி பிரபலமானார். கேங்ஸ் ஆஃப் வாஸிப்பூர், தமிழில் அஞ்சான், சமர் ஆகிய  படங்களிலும் நடித்துள்ளார். 

54 வயதான இவர் கமர்ஷியல் படங்களைவிட நல்ல சினிமாக்களில் நடிப்பதை நோக்கமாக கொண்டுள்ளார். சமீபத்தில் வெளியான இவரது தி ஃபேமலி மேன், ஃபார்ஜி ஆகிய படங்கள் நல்ல வரவேற்பு பெற்றது. இதுவரை தனது நடிப்பிற்காக மனோஜ் பாஜ்பாய்  3 தேசிய விருதுகளை பெற்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது.  

சமீபத்தில் அவர், “இரவு உணவு சாப்பிட்டு 13-14 வருடங்கள் ஆனதென” அளித்த நேர்காணல் வைரலானது. தற்போது ரூ.170 கோடி வருமானம் வைத்துள்ளதாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் சிரித்துக் கொண்டே, “நான் செய்யும் வேலையை வைத்துகொண்டு இவ்வளவு பணம் சம்பாதிக்க முடியாது. நான் இன்னும் எனது வங்கியில் பணத்தினை சேர்க்க கஷ்டப்பட்டு கொண்டுதான் வருகிறேன். இதையெல்லாம் பார்த்த பிறகாவது எனது தயாரிப்பாளர்கள் எனது சம்பளத்தினை உயர்த்தினால் நன்றாக இருக்கும்” எனக் கூறியுள்ளார். 

தற்போது மனோஜ் பாஜ்பாய் டெஸ்பேட்ச், ஜோரம் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஓபிஎஸ் குற்றச்சாட்டுக்கு நயினார் நாகேந்திரன் மறுப்பு!

முதலாமாண்டு பொறியியல் வகுப்புகள் ஆக. 11-ல் தொடக்கம்: அண்ணா பல்கலை. அறிவிப்பு!

முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவிடம் நோக்கி ஆகஸ்ட் 7-ல் அமைதிப் பேரணி!

சொல்லப் போனால்... பஹல்காமிலிருந்து லெவல் கிராசிங் வரை...

தமிழகத்துக்கு மின்-பேருந்துகள்: டாடா மோட்டாா்ஸ் ஒப்பந்தம்

SCROLL FOR NEXT