தமிழில் விஜய்யை வைத்து பிகில், மெர்சல், தெறி என்று மூன்று சூப்பர் ஹிட் படங்களைத் தந்த அட்லி, ஷாருக்கானின் ஜவான் படத்தின் மூலம் ஹிந்தியில் இயக்குநராக அறிமுகமாகிறார்.
இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இப்படம் செப்.7 ஆம் தேதி வெளியாக உள்ளது.
சமீபத்தில் இப்படத்தின் இசை உரிமத்தை டீ - சீரியஸ் நிறுவனம் ரூ.36 கோடிக்கு வாங்கியுள்ளதாக தகவல் வெளியானது. தமிழின் நட்சத்திர நடிகை நயன்தாரா, நடிகர் விஜய் சேதுபதி இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.
இதையும் படிக்க: ஜெயிலர் 3வது பாடல் அப்டேட்!
அட்லியும் நடிகர் விஜய்யும் மிகவும் நெருக்கமான நண்பர்களாக இருப்பதால் ஜவான் படத்தில் விஜய் நடித்திருக்ககூடுமென ஏற்கனவே தகவல்கள் வெளியான நிலையில் பிரபல ஹாலிவுட் சண்டைப் பயிற்சியாளர் யானிக் பென் நேர்காணல் ஒன்றில், “ஜவான் படத்தில் ஒரே பிரேமில் ஷாருக்கானும் நடிகர் விஜய்யும் இருப்பார்கள். ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியடைவார்கள்” என்று கூறினார். பின்னர் அவர், “நான் நடிகர் விஜய் சேதுபதியை கூறினேன்” என மழுப்பலாக பேசினார்.
இந்த விடியோ சமூக வலைதளங்களில் வைரலானதால் நடிகர் விஜய் ஜவான் படத்தில் இருப்பாரென ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். ஆனால் படம் வெளியானால்தான் உண்மை தெரியவரும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.