அனுஷ்காவின் மிஸ் ஷெட்டி, மிஸ்டர் பாலிஷெட்டி: ரிலீஸ் தேதியில் மாற்றம்!
அனுஷ்காவின் மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி படத்தின் வெளியீட்டுத் தேதி மாற்றப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அனுஷ்காவின் மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி படத்தின் வெளியீட்டுத் தேதி மாற்றப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சமீபகாலமாக எந்த படத்திலும் நடிக்காமல் இருந்த அனுஷ்கா தற்போது மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி என்ற படத்தில் நடித்துள்ளார். யுவி கிரியேஷன்ஸ் தயாரித்துள்ள இந்தப்படம் அனுஷ்காவின் 48வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.
நிரவ் ஷா ஒளிப்பதிவில் பி.மகேஷ்பாபு இயக்கத்தில் அனுஷ்கா, நவின் பாலிஷெட்டி இணைந்து நடித்துள்ளனர். மேலும், ஜெய சுதா, முரளி ஷெர்மா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
Advertisement
Advertisement
இப்படத்தின் டீசர் மற்றும் டிரைலர் சமீபத்தில் வெளியாகி வைரலானது. மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி திரைப்படம் வரும் ஆகஸ்ட் 4 ஆம் தேதி வெளியாகவுள்ளதாக படக்குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், இப்படத்தின் வெளியீட்டுப் பணிகள் நிறைவு பெறாததால் வெளியீட்டுத் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மேலும், வெளியீட்டுத் தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.