செய்திகள்

தனுஷ் படத்தில் இணைந்த பிரபல நடிகை!

நடிகர் தனுஷின் 50-வது படத்தில் பிரபல நடிகை ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

DIN

நடிகர் தனுஷின் 50-வது படத்தில் பிரபல நடிகை ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தனுஷ் நடிப்பில் வெளியான ‘வாத்தி’ திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்ற நிலையில், தற்போது இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் ‘கேப்டன் மில்லர்’ படத்தில் தனுஷ் நடித்து வருகிறார். இந்தப் படம் தீபாவளியை முன்னிட்டு திரைக்கு வரவுள்ளது.

இதனைத் தொடர்ந்து, தன் 50-வது படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தனுஷ் இயக்கவுள்ளார். சில நாள்களுக்கு முன்பு இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.

இந்தப் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக துஷரா விஜயனும், சகோதரர்களாக எஸ்.ஜே.சூர்யா, சுதிப் கிஷன் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தது.

இந்நிலையில், இப்படத்தில் நடிகை அபர்ணா பாலமுரளியும் இணைந்துள்ளதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், வடசென்னையை மையமாக கொண்டு உருவாகும் இப்படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

முன்னதாக, தனுஷ் பா.பாண்டி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகி நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

4.2.1976: கருணாநிதி, சில மாஜி தி.மு.க. மந்திரிகள் மீது விசாரணை

ஆட்டோ ஓட்டுநருக்கு கத்திக்குத்து: இருவா் கைது

இந்தியாவுக்கு வரி குறைப்பு: பிரதமா் மோடிக்கு ஜவுளித் தொழில் அமைப்புகள் நன்றி

கர்நாடக பேரவையில் விபி ஜி ராம் ஜி சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி தீர்மானம்

கொலை வழக்கு குற்றவாளி உள்பட 3 போ் மீது குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை

SCROLL FOR NEXT