செய்திகள்

விஜய் பிறந்த நாளில் லியோ படத்தின் முதல் பாடல்!

விஜயின் பிறந்த நாளான ஜூன் 22 ஆம் தேதி லியோ படத்தின் முதல் பாடல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

DIN

விஜயின் பிறந்த நாளான ஜூன் 22 ஆம் தேதி லியோ படத்தின் முதல் பாடல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விக்ரம் படத்தின் வெற்றிக்குப் பிறகு இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நடிகர் விஜய்யுடன் லியோ படத்தில் இணைந்துள்ளார். இதில் த்ரிஷா,  சஞ்சய் தத் உள்ளிட்ட பல பிரபலங்கள் இணைந்துள்ளனர்.

மிஷ்கின், சஞ்சய் தத், கௌதம் மேனன்  ஆகியோர் காஷ்மீர் படப்பிடிப்பை முடித்துவிட்டதாக லோகேஷ் சமீபத்தில் கூறியிருந்தார். இப்படம் வெளியீட்டிற்கு முன்பே ஓடிடி, இசை உரிமம், விநியோக உரிமம் என ரூ.350 கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் ஈட்டியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

லியோ படம் இந்தாண்டு அக்டோபர் மாதம் திரைக்கு வருகிறது.  இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

இந்த நிலையில், லியோ படத்தின் முதல் பாடலானது விஜயின் பிறந்த நாளான ஜூன் 22 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆவுடையாா்கோவிலில் தலையில்லா புத்தா் சிலை கண்டெடுப்பு

அரசுப் பணி: விண்ணப்பங்களை வரவேற்கும் தமிழக அரசு

ஆம்பூா் கலவர வழக்கு தீா்ப்பு ஒத்திவைப்பு: பலத்த போலீஸாா் பாதுகாப்பு

குழந்தை இல்லாத ஏக்கம்: மேற்கு வங்க பெண் தூக்கிட்டுத் தற்கொலை

மதுரை மாநாட்டில் விஜய் பேச்சு ஏற்புடையதல்ல: ஓ.பன்னீா்செல்வம்

SCROLL FOR NEXT