செய்திகள்

போர் தொழில் வசூல் இவ்வளவா?

போர் தொழில் திரைப்படத்தின் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

DIN

போர் தொழில் திரைப்படத்தின் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

சூது கவ்வும் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் அசோக் செல்வன். தெகிடி, ஓ மை கடவுளே போன்ற வெற்றிப் படங்களில் நடித்தவர். இவர் சில நேரங்களில் சில மனிதர்கள், மன்மத லீலை, ஹாஸ்டல், வேழம், நித்தம் ஒரு வானம். எஸ்டேட் படத்திலும் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். 

இவர் நடிப்பில் அறிமுக இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் சமீபத்தில் வெளியான ’போர் தொழில்’ திரைப்படம் ரசிகர்களிடம் ஆதரவைப் பெற்றதால் அதிக திரையரங்குகளில் காட்சிப்படுத்தப்பட்டு வருகிறது. 

இந்நிலையில், ரூ.5.5 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் இதுவரை ரூ.20 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இதில் காவலதிகாரிகளாக அசோக் செல்வன், சரத் குமார் நடித்துள்ளனர்.  நிகிலா விமலும் சிறப்பாக நடித்துள்ளார். விக்னேஷ் ராஜா, ஆல்பிரட் பிரகாஷ் இணைந்து திரைக்கதை எழுதியுள்ளார்கள். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முதல் டி20: இந்தியாவுக்கு 122 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இலங்கை!

டெவான் கான்வேவை பாராட்டி அஸ்வின் வெளியிட்ட அருமையான பதிவு!

பனிமூட்டம் எதிரொலி: தில்லியில் நூற்றுக்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து!

எஸ்.ஐ.ஆர். மூலம் குறுக்குவழியில் வெல்ல முயற்சி: மு.க. ஸ்டாலின்

6 முன்னணி நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.75,257 கோடியாக உயர்வு!

SCROLL FOR NEXT