முகப்பு
செய்திகள்

லியோ முதல் பாடல் வெளியீட்டு நேரம் அறிவிப்பு

விஜய்யின் பிறந்தநாளான இன்று லியோ படத்தின் முதல் பாடல் இன்று மாலை வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 7:11 PM
பகிர்:

விஜய்யின் பிறந்தநாளான இன்று லியோ படத்தின் முதல் பாடல் இன்று மாலை வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விக்ரம் படத்தின் வெற்றிக்குப் பிறகு இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நடிகர் விஜய்யுடன் லியோ படத்தில் இணைந்துள்ளார். இதில் த்ரிஷா,  சஞ்சய் தத் உள்ளிட்ட பல பிரபலங்கள் இணைந்துள்ளனர்.

மிஷ்கின், சஞ்சய் தத், கௌதம் மேனன்  ஆகியோர் காஷ்மீர் படப்பிடிப்பை முடித்துவிட்டதாக லோகேஷ் சமீபத்தில் கூறியிருந்தார். இப்படம் வெளியீட்டிற்கு முன்பே ஓடிடி, இசை உரிமம், விநியோக உரிமம் என ரூ.350 கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் ஈட்டியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

லியோ படம் இந்தாண்டு அக்டோபர் மாதம் திரைக்கு வருகிறது.  இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

இந்த நிலையில், லியோ படத்தின் முதல் பாடலான ‘நான் ரெடிதான்’ பாடல் இன்று மாலை 6.30 மணிக்கு வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →