செய்திகள்

ஆபாச காட்சிகளில் நடித்தது ஏன்? தமன்னா விளக்கம்

இணையத் தொடரில் ஆபாசமாக நடித்தது குறித்து விளக்கமளித்துள்ளார் நடிகை தமன்னா.

DIN

இணையத் தொடரில் ஆபாசமாக நடித்தது குறித்து விளக்கமளித்துள்ளார் நடிகை தமன்னா.

தமிழில் கேடி படத்தின் மூலம் அறிமுகமான தமன்னா, தனுஷுடன் படிக்காதவன், கார்த்தியுடன் பையா, சிறுத்தை, சூர்யாவுடன் அயன், விஜய்யுடன் சுறா, அஜித்துடன் வீரம் உள்ளிட்ட வரிசையான ஹிட் படங்களில் நடித்து பிரபலமானார். தற்போது நடிகர் ரஜினி நடிப்பில் உருவாகும் ‘ஜெயிலர்’ படத்தில் நடித்து முடித்துள்ளார்.

முன்னணி நாயகியாக இருந்தாலும் அவருக்குப் பின்  நடிக்க வந்த சமந்தா, கீர்த்தி சுரேஷ் ஆகியோரின் இடத்தை தமன்னாவால் பிடிக்க முடியவில்லை. 15 ஆண்டுகளாக சினிமாவிலிருப்பவர் ஒரு படத்திற்கு ரூ.4 கோடி சம்பளம் வாங்குவதாகக் கூறப்படுகிறது.

இவர் நடிப்பில் நெட்பிளிக்ஸில் விரைவில் வெளியாக உள்ள ‘லஸ்ட் ஸ்டோரீஸ் - 2’ தொடரின் டீசர், டிரைலரில்  தமன்னா இடம்பெற்றுள்ள காட்சிகள் பயங்கர கவர்ச்சியாக இருந்ததால் அவர் டிரெண்ட் ஆகியுள்ளார். 

மேலும், ஜீ கர்தா தொடரிலும் நடிகர் சுஹைல் நய்யாருடன் நெருக்கமாக நடித்துள்ளார். இதுகுறித்துப் பேசிய தமன்னா, "அந்தத் தொடரில் பள்ளிப்பருவத்து காதலைக் கூறுவதால் சில இடங்களில் நெருக்கமான காட்சிகள் தேவைப்பட்டது. இணைகளுடனான உறவுகளில் இந்த மாதிரியான காட்சிகள் தவிர்க்கமுடியாதவை. அதனால்தான் என்னால் நடிக்க முடிந்தது” எனக் கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விக்கிரவாண்டி அருகே கார் தீப்பிடித்ததில் 3 பேர் பலி!

காந்தி பாதையைத் தொடர்ந்து பின்பற்றுவோம்! மோடி

பாகிஸ்தானில் மிதமான நிலநடுக்கம்!

ஆசியக் கோப்பையை ஐக்கிய அமீரகத்திடம் ஒப்படைத்தார் நக்வி!

மியான்மரில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.1 ஆகப் பதிவு

SCROLL FOR NEXT