செய்திகள்

தங்கலான் படப்பிடிப்பை நிறைவு செய்தார் பார்வதி

நடிகை பார்வதி தங்கலான் படப்பிடிப்பை நிறைவு செய்துள்ளார்.

DIN

நடிகை பார்வதி தங்கலான் படப்பிடிப்பை நிறைவு செய்துள்ளார்.

பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்துவரும் தங்கலான் படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்த படத்தில் நடிகர் பசுபதி, நடிகை பார்வதி, மாளவிகா மோகனன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.

கோலார் தங்க சுரங்கத்தில் தமிழர்கள் பட்ட துயரத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்படும் படம் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

விக்ரம் பிறந்த நாளை முன்னிட்டு வெளியிடப்பட்ட படத்தின் பிரத்யேக மேக்கிங் விடியோ வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றது.

இதற்கிடையே, படப்பிடிப்புக்கான ஒத்திகையின்போது விபத்தில் சிக்கிய விக்ரமுக்கு விலா எலும்பு முறிந்ததால், சிறிது காலம் ஓய்வில் இருந்தார்.

இந்நிலையில், நடிகை பார்வதிக்கான காட்சிகள் எடுத்து முடிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கனமழை: 3 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை!

எதிர்ப்புகள் விலகும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

பள்ளி மாணவா்களுக்கான கலைத் திருவிழா போட்டி

கொடைக்கானலில் கலைத் திருவிழா

சென்னை - போத்தனூா் இடையே தீபாவளி சிறப்பு ரயில்கள் இயக்கம்!

SCROLL FOR NEXT