செய்திகள்

ஸ்வீட் காரம் காப்பி: ஓடிடியில் வெளியாகும் புதிய இணையத் தொடர்! 

நடிகைகள் லக்‌ஷ்மி, மதுபாலா, சாந்தி நடித்துள்ள புதிய இணையத்தொடர் குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

DIN

தமிழில் 80களில் புகழ்பெற்ற நடிகையான லக்‌ஷ்மி, 90களில் புகழ்பெற்ற மதுபாலா, இரண்டாயிரத்துக்கு பிறகு மலையாள சினிமாவில் கவனம் பெற்ற நடிகை சாந்தி பாலசந்திரன் ஆகிய மூன்று தலைமுறை சேர்ந்த நடிகைகள் இணைந்து நடித்துள்ள இணையத் தொடர்தான் ஸ்வீட் காரம் காப்பி. 

நடிகை சாந்தி 

இந்தத் தொடரினை பிஜோய் நம்பியார், கிருஷ்ணா மாரிமுத்து, ஸ்வாதி ரகுராம் ஆகியோர் இயக்கியுள்ளனர். லயன் டூத் ஸ்டுடியோஸ் தயாரித்து அமேசான் ப்ரைம் ஓடிடியில் வெளியாக உள்ளது. 

நடிகை மதுபாலா

இந்தத்தொடரில் 8 எபிசோடுகள் இருக்குமென தகவல் வெளியாகியுள்ளது. இந்த் தொடருக்கு  ரேஷ்மா கட்டாலா, ஸ்வாதி ரகுராம், வினித்ரா மாதவன் மேனன், கிருஷ்ணசாமி ராம்குமார் இணைந்து திரைக்கதை எழுதியுள்ளார்கள். 

நடிகை லக்‌ஷ்மி

ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 தலைமுறை பெண்கள் பயணம் மேற்கொள்ளும்போது நடப்பவையே கதையாக உருவாகியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன். கோவிந்த்   வசந்தா இசையமைத்துள்ளார்.

அமேசான் ப்ரைம் ஓடிடியில் ஜூலை 7ஆம் நாள் வெளியாக உள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விமானத்தில் கரப்பான் பூச்சிகள்: மன்னிப்பு கேட்ட ஏர் இந்தியா!

புதிய இணையத் தொடரில் சைத்ரா ரெட்டி!

ஓடிபி விவகாரம்- திமுகவின் வழக்கு தள்ளுபடி

டிரம்ப் விதித்த 25% வரி... ஆடைத் தயாரிப்புத் துறையில் 20 லட்சம் பேர் வேலை இழக்கும் அபாயம்!

காணாமல் போன 3 சிறுவர்கள் சடலமாக மீட்பு: உ.பி.யில் அதிர்ச்சி!

SCROLL FOR NEXT