இயக்குநர் மணிரத்னம் 
செய்திகள்

ஆஸ்கர் குழு உறுப்பினராக மணிரத்னம் தேர்வு!

‘ஆஸ்கர் விருதுகள்’ தேர்வுக் குழு உறுப்பினராக இயக்குநர் மணிரத்னம் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

DIN

‘ஆஸ்கர் விருதுகள்’ தேர்வுக் குழு உறுப்பினராக இயக்குநர் மணிரத்னம் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

வருகின்ற 2023-ஆம் ஆண்டு ஆஸ்கர் விருதுகளை தேர்வு செய்யும் குழுவுக்கு இந்தியர்கள் உள்பட மொத்தம் 398 பேர் உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் இருந்து ஏற்கெனவே இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், நடிகர் சூர்யா ஆகியோர் தேர்வுக்குழு உறுப்பினராக உள்ள நிலையில், தற்போது இயக்குநர் மணிரத்னமும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

மேலும், ஆஸ்கர் விருது வென்ற ஆர்ஆர்ஆர் படத்தின் இசையமைப்பாளர் கீரவாணி, நடிகர்கள் ராம்சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர். ஆகியோரும் தேர்வுக் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

அதேபோல், ஒளிப்பதிவாளர் கே.கே.செந்தில்குமார், தயாரிப்பாளர் கரண் ஜோகர் ஆகியோரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

றெக்கை இல்லாத தேவதை... கீர்த்தி சனோன்!

எல்லையில் பதற்றம்! பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி துப்பாக்கிச்சூடு - சண்டை நிறுத்தம் மீறல்!

உயிர்த்தெழும் ஓவியமே... ப்ரீத்தி சர்மா!

வங்கதேசத்தில் 2026 பிப்ரவரியில் பொது தேர்தல்! இடைக்கால அரசு அறிவிப்பு!

அனில் அம்பானியிடம் 9 மணி நேரம் விசாரணை: பிடியை இறுக்கும் அமலாக்கத் துறை!

SCROLL FOR NEXT