செய்திகள்

விஜய் வணிகத்தை முறியடித்த சூர்யா!

வெளியீட்டிற்கு முன்பே ’லியோ’ படத்தின் வணிகத்தை ’சூர்யா 42’ படம் முறியடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

DIN

வெளியீட்டிற்கு முன்பே ’லியோ’ படத்தின் வணிகத்தை ’சூர்யா 42’ படம் முறியடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

'அண்ணாத்த' படத்திற்கு பிறகு சிறுத்தை சிவா இயக்கும் படத்தில் சூர்யா நடிக்கிறார். 'சூர்யா 42' என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். தேவி ஸ்ரீபிரசாத் இசையமைக்கிறார். இதில் சூர்யாவுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை திஷா பதானி நடிக்கிறார்.

நிகழ்காலம் கலந்து வரலாற்று பின்னணியில்  3டி தொழில் நுட்பத்தில் வெளியாகவுள்ள இப்படத்தை 10 மொழிகளில் இரண்டு பாகமாக வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. இதுதான் சூர்யாவின் அதிகபட்ச பட்ஜெட் படமென்பதும் குறிப்பிடத்தக்கது.

கோவா மற்றும் பிஜூ தீவில் நடைபெற்ற படப்பிடிப்புகள் முடிவடைந்ததுள்ளது. அதைத் தொடர்ந்து, அடுத்தக்கட்ட படப்பிடிப்பு விரைவில் சென்னையில் துவங்கவுள்ளது.

இந்நிலையில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துவரும் லியோ படத்தின் ஓடிடி, சாட்டிலைட், பிற மொழி வெளியீட்டு உரிமம் ஆகியவை ரூ.400 கோடிக்கு வியாபாரம் ஆனதாக தகவல் வெளியாகியிருந்தது. தற்போது, ’சூர்யா 42’ படத்தின் வெளியீட்டிற்கு முன்பான வியாபாரம் ரூ.500 கோடி வரை நடைபெற்றுள்ளதாக தகவல் கசிந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இட்லி கடை படத்தை மாணவர்களுக்கு இலவசமாக திரையிட வேண்டும்: தமிழக பாஜக

உங்கள் பணம் பறிபோகலாம்! போலி நீதிமன்ற உத்தரவு மோசடி எச்சரிக்கை!!

மதுரை எய்ம்ஸ் நிறுவனத்தில் ஆய்வக உதவியாளர் வேலை!

நவராத்திரி கொண்டாட்டம்... ரேவதி சர்மா!

ஆட்டோ ஓட்டுநர் மீது தாக்குதல்! காரில் இழுத்துச் செல்லப்படும் CCTV காட்சி! | CBE

SCROLL FOR NEXT