செய்திகள்

‘கஸ்டடி’ படத்தின் டீசர் எப்போது?- விடியோ வெளியிட்டு படக்குழு அறிவிப்பு! 

இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள ‘கஸ்டடி’ படத்தின் டீசர் அறிவிப்பு குறித்த விடியோ வெளியாகியுள்ளது. 

DIN

மன்மதலீலை திரைப்படத்திற்குப் பிறகு இயக்குநர் வெங்கட் பிரபு தெலுங்கில் இயக்கிவரும் திரைப்படம் ‘கஸ்டடி’. நாக சைதன்யா நாயகனாக நடிக்கும் இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக க்ரீத்தி ஷெட்டி நடிக்க, ஜீவா வில்லனாக நடிக்கிறார்.

இந்தப் படத்திக்கு இளையராஜா மற்றும் யுவன் ஷங்கர் ராஜா இணைந்து இசையமைக்கின்றனர் என்பது சிறப்பான அம்சம். ஸ்ரீநிவாசா சில்வர் ஸ்கிரீன் இந்தப் படத்தை தயாரிக்கின்றனர். 

படப்பிடிப்பு முடிவடைந்துள்ளதை படக்குழு சமீபத்தில் தெரிவித்தது. இந்தப் படம்  மே மாதம் 12ஆம் தேதி திரையரங்கில் வெளியாகும் என ஏற்கனவே படக்குழு அறிவித்திருந்தது. தமிழ், தெலுங்கில் ரிலீஸாக உள்ளது. 

இந்நிலையில் டீசர் எப்போது என விடியோ வெளியிட்டு அறிவிப்பை வெளியிட்டுள்ளனர் படக்குழு. இந்த டீசரில் நாக சைதன்யா கடலில் சிறையிலிருந்து வெளிவருவது போல காட்சிகள் உள்ளது. இது டீசரல்ல;ஆனால் உங்களை டீஸ் செய்யும் என படக்குழு தெரிவித்துள்ளது.

விடியோ முடிவில் டீசர் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. மார்ச் 16ஆம் தேதி மாலை 4.51 மணிகு வெளியாகுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பள்ளிகளில் மழைநீா் தேங்கக் கூடாது: தலைமை ஆசிரியா்களுக்கு உத்தரவு

விஸ்வகா்மா ஜெயந்தி: பிரதமா் மோடி வாழ்த்து

செங்கோட்டை சிறப்பு ரயிலுக்கு கூடுதல் நிறுத்தங்கள்

யெஸ் வங்கியின் 13.1% பங்குகள்: எஸ்பிஐ விற்பனை

நடுவானில் இயந்திரக் கோளாறு: சென்னை-பெங்களூரு விமானம் அவசரமாக தரையிறக்கம்

SCROLL FOR NEXT