செய்திகள்

‘ஜாலியான சேட்டை பிடித்த நண்பர்...’- லோகேஷ் கனகராஜுக்கு வாழ்த்து கூறிய மாளவிகா! 

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பிறந்த நாளுக்கு நடிகை மாளவிகா மோகனன் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

DIN

மாநகரம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் லோகேஷ் கனகராஜ். வங்கிப் பணியிலிருந்து சினிமா மீதான ஈர்ப்பினால் படம் இயக்க வந்தவர்.

கைதி, மாஸ்டர் படங்களில் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானார். விக்ரம் படத்தின் மூலம் இந்திய சினிமாவிலே அவருக்கென தனி ரசிகர்கள் உருவாகியுள்ளார்கள். குறுகிய காலத்திலே இந்திய சினிமாவில் மிகவும் பிரபலமான இயக்குநராக உருவாகியுள்ளார். 

தற்போது நடிகர் விஜய் உடன் ‘லியோ’ படத்தினை இயக்கி வருகிறார். காஷ்மீரில் படப்பிடிப்பு விருவிருப்பாக நடைபெற்று வருகிறது. 

37வது பிறந்தநாளை கொண்டாடும் லோகேஷூக்கு நடிகை மாளவிகா மோகனன் வாழ்த்து கூறியுள்ளார். மாஸ்டர் படத்தில் மாளவிகா விஜய்யுடன் நடித்திருந்தார். 

மாளவிகா தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது: 

ஜாலியான சேட்டை பிடித்த நண்பர். அவருடன் எப்போதும் உரையாடல் நடந்துகொண்டே இருக்கும். அவருடன் இருக்கும்போது மந்தமான சூழ்நிலையே இருக்காது. சென்னையை எனது வீடு போல உணரவைத்தவர். மேலும் உயர உயர பறந்து செல்லுங்கள். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கேரளத்தில் சிறுத்தையிடம் இருந்து 4 வயது மகனைக் காப்பாற்றிய தந்தை !

3 கோடி பார்வைகளைக் கடந்த பொட்டல முட்டாயே பாடல்!

வைல்ட் ஃபிளவர்... அமைரா தஸ்தூர்!

நயினார் நாகேந்திரனை ஓபிஎஸ் குற்றம் சொல்வதை ஏற்றுக்கொள்ள மாட்டோம்: தமிழிசை

மேட்டூரில் ஆடிப்பெருக்கு விழா: புனித நீராட குவிந்த மக்கள்!

SCROLL FOR NEXT