முதல்முறையாக ஜி.வி.பிரகாஷ் இசை நிகழ்ச்சி!
இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் முதல்முறையாக இசைநிகழ்ச்சி நடத்த உள்ளார்.
இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் முதல்முறையாக இசைநிகழ்ச்சி நடத்த உள்ளார்.
தமிழில் பிரபல இசையமைப்பாளரான ஜி.வி.பிரகாஷ் சமீப காலமாக நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். இவரின் இசையில் உருவான பாடல்கள் இளைஞர்களிடம் பெரிய வரவேற்பைப் பெறுபவை. குறிப்பாக, காதல் பாடல்கள்.
நடிப்பிலும் மினிமம் கியாரண்டி கதாநாயகன் என்பதால் ஜி.வி.பிரகாஷ் பிசியாக இருக்கிறார்.
இதையும் படிக்க: பிரபல ஹாலிவுட் இயக்குநரின் கடைசி திரைப்படம் இதுதானா?
இந்நிலையில், கோவையில் வருகிற மே 27 ஆம் தேதி தன் முதல் இசைநிகழ்ச்சியை ஜி.வி.பிரகாஷ் நடத்துகிறார். தனியார் கல்லூரி ஒன்று இதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறது.
சமீப காலமாக தமிழ் இசையமைப்பாளர்கள் தொடர்ந்து இசை நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான், அனிருத் ஆகியோர் வெளிநாடுகளில் நிகழ்ச்சிகளை நடத்துகின்றனர். இவர்களைப் பின் தொடர்ந்து ஹாரிஸ் ஜெயராஜ், வித்யா சாகர், ஜி.வி.பிரகாஷ் ஆகியோர் இசைநிகழ்ச்சிகளை நடத்த தயாராகிவிட்டனர்!