மிருணாள் தாகூரின் சம்பளம் இவ்வளவா? நடிகைகள் அதிர்ச்சி!
நடிகை மிருணாள் தாகூரின் சம்பளம் சக நடிகைகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
நடிகை மிருணாள் தாகூரின் சம்பளம் சக நடிகைகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
தென்னிந்திய சினிமாவில் எதிர்பார்க்கப்படும் நடிகையாக இருப்பவர் மிருணாள் தாகூர். இவர் நடிப்பில் வெளியான சீதாராமம் படம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றதால் நாடு முழுவதும் பிரபலமடைந்தார். தற்போது தெலுங்கு, ஹிந்தி, தமிழ் ஆகிய மொழிகளில் தயாரிப்பாளர்கள் மிருணாளை ஒப்பந்தம் செய்ய போட்டி போட்டு வருகின்றனர்.
சூர்யா 42 படத்தில் நடிக்க வைக்க மிருணாளிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு பின் அந்த முயற்சி கைவிடப்பட்டது.
இதையும் படிக்க: சிம்புவா இது? வைரல் புகைப்படம்!
இந்நிலையில், நானி நடிக்கும் புதிய படத்தில் நாயகியாக மிருணாள் தாகூர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகவும் சம்பளமாக அவர் ரூ.6 கோடி பெற்றுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
ஒரு சில படங்களிலேயே மிகப்பெரிய சம்பளத்தை வாங்கிய மிருணாளைக் கண்டு சக நாயகிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்!