செய்திகள்

 'பத்து தல' படத்தின் இசை வெளியீட்டு விழா தேதி அறிவிப்பு!

சிம்புவின் 'பத்து தல' படத்தின் இசை வெளியீட்டு விழா தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

DIN

சிம்புவின் 'பத்து தல' படத்தின் இசை வெளியீட்டு விழா தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கன்னடத்தில் சிவராஜ்குமார் நடிப்பில் வெற்றிபெற்ற மஃப்டி திரைப்படம் தமிழில் சிம்பு நடிப்பில் பத்து தல என்ற பெயரில் ரீமேக் செய்யப்படுகிறது. இந்தப் படத்தை 'சில்லுனு ஒரு காதல்', 'நெடுஞ்சாலை' படங்களை இயக்கிய கிருஷ்ணா இயக்கி உள்ளார்.

கௌதம் கார்த்திக், பிரியா பவானி ஷங்கர் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இந்தப் படத்தை ஸ்டுடியோ கிரீன் சார்பாக ஞானவேல் ராஜா தயாரித்துள்ளார். 

சமீபத்தில் சிம்புவின் பிறந்தநாளை முன்னிட்டு ‘பத்து தல’ படத்தின் முதல் பாடலான ‘நம்ம சத்தம்’ பாடலின் லிரிக்கல் விடியோவை படக்குழுவினர் வெளியிட்டனர்.  2வது பாடல், ‘நினைவிருக்கா' மார்ச் 13ம் தேதி மாலை 6 மணிக்கு படக்குழுவினர் வெளியிட்டனர்.

இந்த நிலையில்  'பத்து தல' படத்தின் இசை வெளியீட்டு விழா தேதி மார்ச் 18 ஆம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளதாக படக்குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மிதுன ராசிக்கு மனகுழப்பம் தீரும்: தினப்பலன்கள்!

உற்பத்தித் துறையில் 16 மாதங்கள் காணாத வளா்ச்சி

மாமல்லபுரத்தில் கைவினைப் பொருள்கள் கண்காட்சி

ஆடி வெள்ளி: அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடு

பிளஸ் 2 தோ்ச்சி பெற்ற 80 சதவீத மாணவா்கள் உயா்கல்வியில் சோ்க்கை

SCROLL FOR NEXT