செய்திகள்

பொன்னியின் செல்வன் - 2 வசூல் இவ்வளவா? அதிகாரப்பூர்வ அறிவிப்பு

எழுத்தாளா் கல்கியின் நாவலை அடிப்படையாகக் கொண்டு,  இயக்குநா் மணிரத்னம், இரு பாகங்களாக பிரம்மாண்டமாக உருவாக்கிய படம் ‘பொன்னியின் செல்வன்’. 

DIN

எழுத்தாளா் கல்கியின் நாவலை அடிப்படையாகக் கொண்டு,  இயக்குநா் மணிரத்னம், இரு பாகங்களாக பிரம்மாண்டமாக உருவாக்கிய படம் ‘பொன்னியின் செல்வன்’. 

முதல் பாகம், கடந்த ஆண்டு செப்.30-ஆம் தேதி உலகெங்கும் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. இத்திரைப்படத்தில் ஜெயம் ரவி, விக்ரம், காா்த்தி, திரிஷா, ஐஸ்வா்யா ராய், சரத்குமாா், பாா்த்திபன் உள்ளிட்ட மிகப் பெரிய நடிகா்கள் பட்டாளமே நடித்திருந்தது. 

ஏ.ஆா்.ரகுமானின் இசையமைப்பில் உருவான இப்படத்தின் முதல் பாகம் ரூ.500 கோடிக்கும் மேல் வசூலித்து சாதனை படைத்தது. முதல் பாகத்தை தொடா்ந்து பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகம் கடந்த வெள்ளிக்கிழமை வெளியானது.  

இதையும் படிக்க: ஃபர்ஹானா: ஐஸ்வர்யா ராஜேஷ் படத்தில் ஆண்ட்ரியா பாடிய பாடல்!

இந்நிலையில், வெளியான 4 நாளில் உலகம் முழுவதும் ரூ.200 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளதாக படக்குழு அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

55வது ஸ்டேட்ஸ்மேன் விண்டேஜ் - கிளாசிக் கார் பேரணி - புகைப்படங்கள்

விராட் கோலி அசத்தல்! நியூசி.க்கு எதிரான ஒருநாள் தொடரை வெற்றியுடன் தொடங்கிய இந்தியா!

சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் சோனியா காந்தி!

காங்கிரஸைத் துடைத்தெறிந்த ஹிந்தி எதிர்ப்புப் போராட்டம்! | Parasakthi

பாஜக - சிவசேனை கூட்டணிக்கு 90% வெற்றி வாய்ப்பு! பியூஷ் கோயல்

SCROLL FOR NEXT