வெளியானது கேப்டன் மில்லர் அப்டேட்!
கேப்டன் மில்லர் படத்தின் புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.
செய்திகள்வெளியானது கேப்டன் மில்லர் அப்டேட்!
கேப்டன் மில்லர் படத்தின் புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கேப்டன் மில்லர் படத்தின் புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நடிகர் தனுஷ் அருண் மாதேஸ்வரன் இயக்கும் கேப்டன் மில்லர் படத்தில் நடித்து வருகிறார். சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். கதாநாயகியாக பிரியங்கா மோகன் நடிக்க, முக்கிய வேடத்தில் சந்தீப் கிஷன் நடிக்கிறார். திரைப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.
தென்காசி மாவட்டம் மத்தளம்பாறையில் படத்திற்கான கூடுதல் காட்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது.
இதையும் படிக்க: உடல் எடையை அதிகரித்த சூர்யா.. வைரல் புகைப்படம்!
இந்நிலையில், நடிகர் தனுஷ் திரைத்துறையில் 21 ஆண்டுகளை நிறைவுசெய்ததையொட்டி கேப்டன் மில்லர் படத்தின் முதல் பார்வை போஸ்டர் ஜூன் மாதமும் டீசர் ஜூலை மாதமும் வெளியாகும் என சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.