செய்திகள்

சுனைனாவின் ரெஜினா படம் குறித்த அப்டேட்! 

நடிகை சுனைனா நடித்துள்ள ரெஜினா படத்தின் டீசர் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. 

DIN

காதலில் விழுந்தேன் படத்தின் மூலம் தமிழில் 2008இல் அறிமுகமானவர் நடிகை சுனைனா. தெலுங்கு, மலையாளம், கன்னட மொழிகளிலும் பல படங்களில் நடித்துள்ளார். கடைசியாக விஷாலின் லத்தி படத்தில் நடித்திருந்தார். இந்தப் படம் 2022, டிச.22இல் வெளியாகியது. கலவையான விமர்சனங்கள் வந்தது. 

தெறி படத்தில் நடிகர் விஜய்யுடன் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். நிலா நிலா ஓடி வா, பிங்கர்டிப், சதுரங்கம், மீட் க்யூட் ஆகிய இணையத் தொடர்களிலும் நடித்துள்ளார்.

நேரம், பிரேமம் படத்தில் துணைக் கதாபாத்திரமாக நடித்த அனந்த் நாக் உடன் சுனைனா நடித்துள்ள படம்தான் ரெஜினா. இதில் நிவாஸ் ஆதித்தன், விவேக் பிரசன்னா, பவா செல்லதுரை உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். 

சதிஷ் நாயர் தயாரித்துள்ள இந்தப் படத்தினை இயக்குகிறார் டோமின் டி செல்வா. யுகபராதி எழுதிய ‘சூராவளிப் போல’ எனும் இந்தப் பாடலை சித் ஸ்ரீராம் பாடியுள்ளார். தயாரிப்பாளரான சதிஷ் நாயர் இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என பான் இந்தியப் படமாக ரிலீஸாக உள்ளது.

இந்தப் படத்தின் முதல் பாடலான ‘சூராவளிப் போல’ ஜனவரி 7ஆம் தேதி வெளியானது. இந்நிலையில் படத்தின் டீசர் வரும் 30ஆம் நாள் வெளியாக உள்ளதென படக்குழு அறிவித்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பள்ளி, குடியிருப்புப் பகுதியில் திரியும் குரங்குகளை அப்புறப்படுத்தக் கோரிக்கை

கந்தா்வகோட்டையில் வாக்காளா் பட்டியல் திருத்தப் பணி தொடக்கம்

விராலிமலையில் வாக்காளா் பட்டியல் திருத்தப் பணிகள் தொடக்கம்

நவ.17-இல் அஞ்சல் ஆயுள் காப்பீட்டு முகவா் பணிக்கான நோ்காணல்

சந்திரமெளலீஸ்வரா் கோயில் குடமுழுக்கு

SCROLL FOR NEXT