செய்திகள்

டிஆர்பி பட்டியலில் முதலிடத்தைப் பிடித்த வானத்தைப் போல!

கடந்த ஓராண்டுக்கும் மேலாக கயல் - எதிர்நீச்சல் ஆகிய இரு தொடர்கள் மட்டுமே டிஆர்பி பட்டியலில் முதலிடத்தைப் பகிர்ந்துகொண்டன.

DIN


சின்னத்திரை தொடர்களுக்கான டிஆர்பி பட்டியலில் வானத்தைப் போல தொடர் முதலிடத்தைப் பிடித்துள்ளது. 

சன் தொலைக்காட்சியில் பல முதன்மைத் தொடர்கள்  ஒளிபரப்பாகிவருகின்றன. அவற்றில் வானத்தைப்போல தொடரும் ஒன்று. இதுவரை டாப் 5 இடங்களில் ஒன்றாக இருந்த வானத்தைப்போல தொடர், இந்த வாரம் பட்டியலில் முதன்மை இடத்தைப் பிடித்துள்ளது.

கடந்த ஓராண்டுக்கும் மேலாக கயல் - எதிர்நீச்சல் ஆகிய இரு தொடர்கள் மட்டுமே டிஆர்பி பட்டியலில் முதலிடத்தைப் பகிர்ந்துகொண்டன. ஒருகட்டத்தில் எதிர்நீச்சல் தொடர் தொடர்ந்து முதலிடத்தில் நீடித்து வந்தது. 

இதனிடையே இந்த வாரம் வெளியாகியுள்ள டிஆர்பி பட்டியலில் வானத்தைப்போல தொடர் 10.40 புள்ளிகளைப் பெற்று முதலிடம் பிடித்துள்ளது. 

அண்ணன் - தங்கை பாசத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்டு வரும் இந்தத் தொடர், திருமணம் ஆன பிறகு அண்ணன், தங்கை உறவு சந்திக்கும் பிரச்னைகள் குறித்து விவரிக்கிறது. ஸ்ரீகுமார், மான்யா, அஷ்வந்த் கார்த்தி உள்ளிட்டோர் முதன்மை பாத்திரங்களில் நடிக்கின்றனர்.

சன் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை மாலை 8 மணிக்கு வானத்தைப்போல தொடர் ஒளிபரப்பாகிறது.  நீண்ட மாதங்களுக்குப் பிறகு 8 மணிக்கு ஒளிபரப்பாகும் தொடர் டிஆர்பியில் முதலிடம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அடுத்த 3 மணிநேரத்துக்கு சென்னை, 13 மாவட்டங்களில் மழை!

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் புத்தக காட்சியை பார்வையிட்ட முதல்வர் ஸ்டாலின்

சாதி எனும் வைரஸால் சமூக இடைவெளி... பாலிவுட் இயக்குநர் ஆதங்கம்!

ஒரேயொரு வேட்பாளர் வெற்றி! ‘பிகாரில் தேர்தல் நியாயமாக நடைபெறவில்லை’ -மாயாவதி

“கடக ராசி நேயர்களே!" இந்த வார ராசிபலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்!

SCROLL FOR NEXT