ஜூனியர் பாலையா 
செய்திகள்

நடிகர் ஜூனியர் பாலையா காலமானார்!

நடிகர் ஜூனியர் பாலையா என்றழைக்கப்படும் ரகு பாலையா(வயது 70) உடல்நலக் குறைவால் இன்று அதிகாலை உயிரிழந்தார்.

DIN

சென்னை: நடிகர் ஜூனியர் பாலையா என்றழைக்கப்படும் ரகு பாலையா(வயது 70) உடல்நலக் குறைவால் இன்று அதிகாலை உயிரிழந்தார்.

பழம்பெரும் நடிகர் டி.எஸ்.பாலையாவின் மூன்றாவது மகன் ரகு பாலையா. 1975-ஆம் ஆண்டு ‘மேல்நாட்டு மருமகள்’ என்ற படத்தின் மூலம் அறிமுகமானார்.

கரகாட்டக்காரன், கோபுர வாசலிலே, சுந்தரகாண்டம், சாட்டை, கும்கி உள்பட 100-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

சென்னை வளசரவாக்கத்தில் உள்ள இல்லத்தில் வசித்து வந்த ஜூனியர் பாலையா, இன்று அதிகாலை திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்தார்.

ஜூனியர் பாலையாவின் இல்லத்தில் திரைத்துறையினர் மற்றும் மக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள அவரது உடல் நாளை தகனம் செய்யப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அலையும் அழகும்... இலங்கையில் ஆண்ட்ரியா!

மும்பை: புறநகர் ரயிலில் இருந்து விழுந்து 3 பயணிகள் காயம்

“உள்ளூரை அறிந்துகொள்ளவே சுற்றுலா”: கார்த்திக் முரளி

இஷான் கிஷன் சதம் விளாசி அதிரடி; நியூசிலாந்துக்கு 272 ரன்கள் இலக்கு!

எப்ஸ்டீன் கோப்புகளில் மோடியின் பெயரா? மத்திய அரசு மறுப்பு!

SCROLL FOR NEXT